UPDATED : நவ 23, 2025 09:01 PM | ADDED : நவ 23, 2025 08:53 PM
திருநெல்வேலி: கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( நவ.,24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நாளை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0z2k7ica&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திருநெல்வேலிதென்காசி ஆகிய மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த பருவ தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பேரிடர் குழு தயார்
நெல்லை மாவட்டத்தில் 26 பேர் கொண்ட மாநில பேரிடர் குழுவும், 28 பேர் கொண்ட மத்திய பேரிடர் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு
நெல்லையில் மழை பாதிப்பு தொடர்பான உதவிகளை பெற இலவச எண்கள் அறிவிப்பு:0462-250107097865661111077