உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகள் 26,000 பேருக்கு ஸ்கூட்டர்

மாற்றுத்திறனாளிகள் 26,000 பேருக்கு ஸ்கூட்டர்

சென்னை : மாற்றுத்திறனாளிகள் 26,000 பேருக்கு, 130 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 'ஸ்கூட்டர்' வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழகம் முழுதும் விண்ணப்பித்துள்ள, 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு, 130 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 'பெட்ரோல் ஸ்கூட்டர்' வழங்க உள்ளது. இப்பணியை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்க, தமிழக உரிமைகள் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, 'விழுதுகள்' என்ற பெயரில் மறுவாழ்வு சேவை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை, முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும். அந்த வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேவைக்கேற்ப, கேட்டல், பேச்சு பயிற்சி, சிறப்பு கல்வி போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன.மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில், சிறப்பாக செயல்பட்ட 16 பேருக்கு, மாநில அளவிலான விருதுகளை முதல்வர் வழங்கினார்.சென்னை கே.கே.நகரில், 15 கோடி ரூபாய் செலவில், புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையும் முதல்வர் துவக்கி வைத்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கும், ஆரம்ப நிலை இடையீட்டு மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களாக, தரம் உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அறிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சுப்பிரமணியன், தலைமைச் செயலர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர் லட்சுமி, கமிஷனர் சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalni
டிச 06, 2024 07:50

இதைத் தவிர மற்ற எல்லா இலவசங்களையம் ரத்து செஞ்சிடுங்க. முன்னொரு காலத்தில் காற்றும் இலவசமாக கிடைக்காது. திருட்டு த்ரவிஷன்கள் வயிறு வளர்ப்பதற்கு/கொள்ளையடிப்பதற்கு இலவசம் பயன் படக் கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை