உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிரடி நடவடிக்கை! 78 சைபர் குற்றவாளிகள் கைது

அதிரடி நடவடிக்கை! 78 சைபர் குற்றவாளிகள் கைது

சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் பண மோசடி குற்றங்களை கட்டுப்படுத்த, மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் இருப்போரை கைது செய்ய, 'திரைநீக்கு' என்ற பெயரில், அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார்.மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில், மாவட்ட எஸ்.பி.,க்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாநிலம் முழுதும் சைபர் காவல் நிலையங்களில் பதிவான, 158 வழக்குகள் குறித்து, கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்தது. விசாரணையில், சைபர் குற்றவாளிகள், 41.97 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. விசாரணையின் தொடர்ச்சியாக, 135 வழக்குகளில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகள், 78 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நாடு முழுதும், 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய, ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mahendran Puru
டிச 12, 2024 14:58

நாட்டில் இப்போது இந்த டிஜிட்டல் குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழக காவல் துறை சிறப்பாக நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 09, 2024 13:02

இந்த எழுபத்தெட்டு பேர்களில் உங்கள் கட்சி மாடல் கொள்கைப்படி சமூக நீதி கடைப்பிடிக்கப்பட்டதா?


Kanns
டிச 09, 2024 09:25

Why Such Criminals Not Arrested Earlier& Waiting for DGP Conference??? Commissions. Actions after, Centre tells to act Tough


Mahendran Puru
டிச 12, 2024 15:06

காமெடி பண்றதுக்கு ஒரு அளவு வேணும் தம்பி.


RAJ
டிச 09, 2024 07:45

இவரை மாற்றினாலே தமிழ்நாட்டில் குற்றங்கள் குறையும்.. திறமை இல்லாதவர்.


Barakat Ali
டிச 09, 2024 09:31

திறமை மெத்மெத் அயலக அணியாளருடன் உறவைப் பேணுவதில் உள்ளது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை