உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேகமாக பரவும் ஸ்கிரப் டைபஸ்; நாய் வளர்ப்போருக்கு எச்சரிக்கை

வேகமாக பரவும் ஸ்கிரப் டைபஸ்; நாய் வளர்ப்போருக்கு எச்சரிக்கை

மதுரை: நாய்கள் வளர்ப்பதன் மூலம் அதன் உடலில் உள்ள உண்ணிகள் மனிதர்களை கடிப்பதால், 'ஸ்கிரப் டைபஸ்' எனும் உண்ணி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், உண்ணிகள், ஆடு, மாடு, நாய்களின் உடலில் ஒட்டிக்கொண்டு வாழும். ஒட்டுண்ணிகள் ஆடு, மாடுகள் மலைப்பகுதிகளிலும், புதர்களிலும் மேய்வதால் அந்த இடங்களில் ஒட்டுண்ணிகள் அதிகம் காணப்படும். மேலும், வீடுகளை சுற்றி ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தால் அவை மூலம் தெரு நாய்கள், வீட்டில் வளர்க்கும் நாய்களையும் இந்த ஒட்டுண்ணிகள் தொற்றிக் கொள்கின்றன. நாய்களை குளிக்க வைக்கும் போதோ, கொஞ்சும் போதோ இந்த உண்ணிகள் மனிதர்கள் மீதேறி கடிக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன். அவர் கூறியதாவது: இந்த உண்ணி கடிக்கும் போது உடனடியாக பாதிப்பு தெரியாது. அடுத்தடுத்த நாட்களில் கொப்புளம் போன்ற தடிப்பு ஏற்படும். இருமல், சளியின்றி காய்ச்சல் ஏற்படும். மூன்று நாட் களில் காய்ச்சல் குணமாகாவிட்டால் எலீசா ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். உடலில் புண் போன்று காயமும், காய்ச்சலும் இருந்தால் சிகிச்சை பெறுவது அவசியம். க வனிக்காமல் விட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். கிருமித்தொற்று வீட்டைச் சுற்றி ஆடு, மாடுகள் மேய்ந்தால் மூன்று பங்கு சுண்ணாம்பு, ஒரு பங்கு ப்ளீச்சிங் பவுடர் கலந்து வீட்டை சுற்றி துாவ வேண்டும். நாய்கள் வெளியில் சென்று வந்தால் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் காலை கழுவ வைக்கும் போது கிருமித்தொற்று, உண்ணித்தொற்று வராது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ