உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துாரில் தீவிரமாகும் கடல் அரிப்பு: ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் குடுமிப்பிடி

திருச்செந்துாரில் தீவிரமாகும் கடல் அரிப்பு: ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் குடுமிப்பிடி

துாத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், சமீபமாக கடல் திடீரென உள்வாங்குதல், அலையின் சீற்றம் அதிகரிப்பு, கடற்கரையில் மண் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால், பக்தர்கள் கடலில் புனித நீராடுவதில் சிரமம் இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இங்கு, 2022ல் ஆய்வு நடத்திய சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர், அமலிநகர், ஜீவாநகரில் ஒரே நேரத்தில் துாண்டில் வளைவு கட்டவும், கரை பாதுகாப்பு பணிகளை செய்யவும் பரிந்துரை செய்தனர்.ஆனால், நிதி நிலையை கருத்தில் கொண்டு, அமலிநகரில் மட்டும் துாண்டில் வளைவு கட்ட, 58 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பணி நடந்து வருகிறது.நிதி இல்லை எனக்கூறி, ஜீவாநகரில் துாண்டில் வளைவு அமைக்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.இதற்கிடையே, திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 18 கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர் ஒரு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளனர்.இதன்படி, திருச்செந்துார் கோவில் கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு தண்ணீருக்குள் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்; 700 மீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பு கொண்டு செயற்கை கடற்கரையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்த பரிந்துரையை செயல்படுத்த, 18 கோடி ரூபாயை யார் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக, அறநிலையத் துறைக்கும், மீன்வளத் துறைக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திருச்செந்துாரில் நிலவும் கடல் மண் அரிப்பு பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண அரசு முன்வர வேண்டும். கோவில் கடற்கரை பகுதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், இந்த பணிகளை மீன்வளத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செய்யும் போது, அவர்கள் துறையில் இருந்து நிதியை ஒதுக்கீடு செய்வதே நல்லது என, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.இரண்டுமே தமிழக அரசின் துறைகள் தான். ஏதோ வேறு மாநில அரசு துறைகள் போல, அவசர கால பணிக்கு இப்படி குடுமிப்பிடி சண்டை போடுவது சரியல்ல.மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதியான திருச்செந்துாரிலேயே இந்த நிலை நீடிப்பதால், யாரிடம் போய் முறையிடுவது என, தெரியவில்லை.யார் நிதி ஒதுக்கீடு செய்தாலும், ஐ.ஐ.டி., குழுவினரின் நேரடி கண்காணிப்பில் பணிகள் நடக்க வேண்டும். மீன்வளத் துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஜன 12, 2025 14:03

நல்லாத் தேடிப் பாருங்க. திருச்செந்தூர் மண் எடுத்து வூடு கட்டினா ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லி நோண்டி எடுத்து வித்துருப்பாய்ங்க.


Karthik
ஜன 12, 2025 11:36

ஆட்டையை போடும்போது மட்டும் 50 - 50 பங்கு கரெக்டா கேக்குற இந்த களவாணிங்க, இப்ப அதே பார்முலாவுல ரெண்டு களவாணி அமைச்சகமும் 50 - 50 குடுத்தா பிராப்ளம் சால்வ்டு. ஆனா குடுக்க மாட்டாங்களே...


R. SUKUMAR CHEZHIAN
ஜன 12, 2025 10:36

இந்து அறநிலையத் துறை விட்டு அரசு வெளியேற வேண்டும், நமது கோவிகளை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் வரும் வருமானத்தை கொள்ளை அடித்து, ஹிந்து தர்மத்திற்கு எதிராக செயல்படும், இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு குட்டி சவர் ஆக்கிய இந்த திராவிட கும்பல்களிடம் இருந்து நமது கோவில்களை காக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.


Barakat Ali
ஜன 12, 2025 08:32

செயல்படுத்த தயக்கம் அல்லது நிதிநிலை ஒத்துவராது என்றால் எதற்காக ஐ ஐ டி யை கன்சல்ட் செய்கிறீர்கள் ????


V GOPALAN
ஜன 12, 2025 08:26

Our Dravida tamilan go to all temples for time passing abd for free food but they will vote yo Periar based politician enmasse. Honest devotees are only telugu , kannada and malayalees.


Sivagiri
ஜன 12, 2025 07:45

மீன் வள துறை என்றால் சர்ச்தான் கட்டுவர் . . கோவிலுக்கு முன்னால் சர்ச் கட்டணுமா ?


Vishnu Kumar
ஜன 12, 2025 07:37

இந்து மத வழிபாட்டு தளங்கள் வழியே வரும் வருமானத்தை கொள்கை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசு, அதே வழிபாட்டுத் தலங்கள் மேம்படுத்த தயங்குவது முற்றிலும் அவர்களின் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடாக தெரிகிறது, இந்த இந்து மத மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக பெரும்பான்மை மக்கள் அகதிகளாக வாழும் நாள் விரைவில் வரும்...


Palanisamy T
ஜன 12, 2025 13:08

நீங்கள் சொல்வதும் உண்மைதான். பெரும்பான்மை மக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழும் நாள், திமுக ஆட்சி தொடர்ந்தார்ப் போல் இருந்து கொண்டே யிருந்தால் அந்த நாள் தமிழகத்தில் நிச்சயம் மலரத்தான் செய்யும். திமுக வினருக்கு மதச் சார்பற்ற கொள்கை அதன் பலம் பலவீனம் என்னவென்றே தெரியாது. அவர்களை பொறுத்தமட்டில் மதச் சார்பற்ற கொள்கை என்பது ஹிந்துக்களுக்கு மட்டும்தான். பொங்கல் திருவிழா இதுநாள்வரை காலம் காலமாக பொங்கல் திருவிழாவாகயிருந்தது. இன்று திமுகவினர் பொங்கல் நாளை சமத்துவ பொங்கலாக கொண்டாவேண்டுமென்ற புதியவிளக்கம். முன்பெல்லாம் நாம் இந்தப் பெயரே கேள்விப்படாதவொன்று. யாராக இருந்தாலும் தமிழர்கள் யாவரும் பொங்கலை கொண்டாளாம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழர் திருநாளான பொங்களை கொண்டாடுவார்கள். இன்று மதம் மாறியவர்கள் எத்தனை பேர் பொங்கலை கொண்டாடுகின்றார்கள். ஆகையால் நாளை நம் மக்கள் அகதிகளாக போகும் நாளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள். இன்று மதம் மாறிப் போனவர்கள் தமிழனென்ற நம் முன்னோர்கள் கொடுத்த நல்ல அடையாளத்தை தொலைத்துவிட்டவர்கள் ரொம்ப நல்லவர்கள் இவர்கள்


Kasimani Baskaran
ஜன 12, 2025 07:11

ஆற்று நீரோட்டத்தையே கூட தாங்கமுடியாத, இவர்களால் இவர்கள் மாடலில் கட்டப்பட்ட, பாலம் என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும். துணித்து கடலுக்குள் என்றால் இன்னும் பெரிய அளவில் கதை விடவே வாய்ப்பு இருக்கிறது. அந்த அறுப்படையான்தான் காப்பாற்ற வேண்டும்.


N thirumalsi
ஜன 12, 2025 06:48

கேரளா செல்லும் கருங்கல் டிப்பர் லாரிகளை இரண்டுநாள் திருப்பி திருச்செந்தூர் விட்டு முன்றே நாளில் துண்டில் வலை ரெடி


ayen
ஜன 12, 2025 05:50

இதே பிரச்சனை வேளாங்கன்னி நடந்திருந்தால் உடனே அரசு நடவடிக்கை எடுத்திருக்கும்.


Venkat
ஜன 12, 2025 10:47

நாகூர் தர்காவில் இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்படும்


புதிய வீடியோ