உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவகால மருத்துவ முகாம் 15.84 லட்சம் பேர் பயன்

பருவகால மருத்துவ முகாம் 15.84 லட்சம் பேர் பயன்

சென்னை:''வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில், 15.84 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை பெரும்பாக்கம் அரசு பள்ளியில், 'வருமுன் காப்போம்' திட்டத்தின் மருத்துவ முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:பருவகால தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்கிய, அக்., 15ம் தேதியில் இருந்து இதுவரை, 28,620 முகாம்கள் நடத்தப்பட்டு, 15.84 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதில், 8,593 பேருக்கு காய்ச்சல்; 61,185 பேருக்கு சளி, இருமல்; 6,286 பேருக்கு வயிற்றுப்போக்குக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களை விட, டெங்கு பாதிப்பு குறைவாக தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை