உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு

மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப்.4) ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மதுரையில், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மலையை காக்க, நாளை (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=txmtpcxh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அனுமதி மறுப்பு:

இந்நிலையில், இந்த ஆர்ப்பாடம் நடத்துவதற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்,'' என மதுரை நகர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பிப்.,4 ல் ஹிந்து முன்னணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அனுமதி மறுத்த விவரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் ஹிந்து முன்னணி ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

144 தடை:

இந்நிலையில், அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளதால், இன்றும் நாளையும் (பிப்.,3, 4) மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Thamiyoru Thamilachi
பிப் 04, 2025 10:41

ஒற்றை சிலம்பால் நீதியை நிலைநாட்ட தன் இன்னுயிர் நீத்தான் மானமுள்ள எம் தமிழ் இன மதுரை பாண்டிய மன்னன்… தமிழ் மன்னர் ஆட்சி ஒற்றை பிரியாணிக்காக மத கலவரத்தை தூண்டி தூங்கா நகரமான தமிழரின் மானமும் வீரமும் நீதியும் செழித்தோங்கும் சின்னமான மாண்புமிகு மதுரையை முடக்கும் திருட்டு திராவிட இனம்


AMLA ASOKAN
பிப் 03, 2025 19:54

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா 400 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . இது வரையில் அங்கு ஆடு, கோழி உயிர்பலி , பிரியாணி விருந்து ஆகியவை எவ்வித தடையுமின்றி பல்லாண்டுகளாக நடை பெற்று வந்துள்ளன . எந்த ஒரு ஹிந்து அமைப்பும் சென்ற ஆண்டு வரையில் இது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை . இரண்டு ஸ்தலங்களும் வெகு தொலைவிலும் , தனி தனி வழித்தடத்துடனும் உள்ளன . இரண்டு மதத்தினரும் நல்லுறவுடனும் , நேசத்துடனும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது வரலாறு . தர்காவுக்கு கீழ் கோவில் போன்ற வடநாட்டு பிரச்சினை எதுவுமில்லை . மலையின் மேல் உள்ள கோவில் , தர்கா வளாகங்கள் மட்டும் தான் புனிதமானவை , அல்லாமல் அரசுக்கு சொந்தமான மலை முழுவதுமே புனிதமானது என்ற புதிய கருத்து ஏற்கமுடியாதது . சாமி பக்திக்கு எதிரானது அசைவ உணவு என்பது லட்சக்கணக்கில் ஆட்டு கிடா வெட்டும் கிராம கோவில்களில் செல்லுபடியாகாது . இங்கு அரசியலுக்காக மத வேற்றுமையை , பகைமையை உண்டாக்குவது தான் மற்ற நாடுகளில் எதிர்வினையை ஏற்படுத்துகிறது . மதநல்லினக்கணம் இந்தியாவை வலிமைப் படுத்தும் .


Kasimani Baskaran
பிப் 04, 2025 10:29

ஆறுபடை வீடுகளில் ஒன்றில் மலையை ஆக்கிரமித்து விட்டோம். அது தொடரும் என்பது போலத்தான் வாதம் இருக்கிறது. முருகன் சைவக்கடவுள் - மாமிசம் படைக்கவோ அல்லது ஆடு வெட்டுவதோ மரபு கிடையாது. பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக 400 வருடம் 500 வருடமெல்லாம் வருகிறது. பல்லாயிரம் வருடங்கள் பழமையான கோவில்கள் இவை. திராவிடர்கள் தலையெடுத்து பின் தமிழகம் / இந்துக்கடவுள்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பல கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. கோவில்கள் தூர்ந்து போய் இருக்கிறது. கோவில்களின் மரபுகளை, புனிதத்தன்மை கெட்டுவிடும் அளவுக்கு பல லீலைகள் நடக்கிறது. அதெல்லாம் நல்லதற்கில்லை.


Nandakumar Naidu.
பிப் 03, 2025 14:57

முதுகெலும்பில்லாத முதல்வர் மற்றும் ஆட்சி. தமிழகத்தின் அனைத்து ஹிந்துக்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டும்.


Thiyagarajan S
பிப் 03, 2025 14:08

இதுதான் திராவிட மாடல் ஆட்சி முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு தடை கிடையாது ஆனால் இந்துக்களுக்கு மட்டும் எதற்கு அனுமதி கேட்டாலும் தடை..... தடை அதை உடை..... தடை அதை உடை.., அப்பன் முருகன் நம்மை பார்த்துக் கொள்வான் தடையை பற்றி கவலைப்படாமல் அனைவரும் நாளை அணி திரள்வோம்...


Anand
பிப் 03, 2025 11:40

அதுவே எவனாவது மூர்க்க தீவிரவாதி சவ ஊர்வலம் என்றால் உடனே அனுமதி கொடுத்துவிடுவார்கள்...


angbu ganesh
பிப் 03, 2025 11:27

மக்களே 2026 அன்னிக்கு இன்னொரு நரகாசுரனை தோற்கடித்து இன்னொரு தீபாவளியை நாம கொண்டாடணும்


Madras Madra
பிப் 03, 2025 11:06

தமிழகத்தில் தாமரை மலர செய்ய முருகன் முடிவெடுத்து விட்டான்


jayvee
பிப் 03, 2025 10:57

நவாஸ் கனி அங்கு சென்றபோது அங்கு சென்று மலைமீது அமர்ந்து மாட்டுக்கறி நின்றபோது ஏற்படாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை இப்போது ஏற்படும் என்றால் தவறு இஸ்லாமிய அமைப்புகள்மீது உள்ளது என்பதை திமுக அரசு மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது ..


AMLA ASOKAN
பிப் 03, 2025 20:12

நவாஸ் கனி மலை மீது ஏறவுமில்லை , மலைமீது அமர்ந்து மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடவும் இல்லை . இது இட்டுக்கட்டிய கற்பனை . வடிகட்டிய பொய் .


Muralidharan raghavan
பிப் 03, 2025 10:26

இஸ்லாமிய அமைப்புகளைத்தானே சொல்கிறீர்கள். கரெக்ட்


AMLA ASOKAN
பிப் 03, 2025 10:18

இத்தகு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் மக்களிடேயே முஸ்லீம், ஹிந்து என்ற பிரிவினை விதைக்கப் படுவதுடன் பகைமையும் வளர்க்கப்படுகிறது. இதை ஹிந்துத்வா அமைப்பினர் மிகவும் விரும்புகிறார்கள். முஸ்லிம்கள் அமைதியாக அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த போராட்டமும் செய்ய முன்வரவில்லை. கிராம மக்கள் கோவில்களில் ஆட்டு கிடா வெட்டி தான் வழிபடுகிறார்கள். மலை மேல் உள்ள கோவில் வளாகத்தில் குடும்பத்துடன் கூட்டமாக அசைவ உணவு சாப்பிட்டும் வருகிறார்கள். இதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா? மலைமேல் உள்ள இரு சாராரின் கடவுளும் இந்த தேவையற்ற சர்ச்சையை கண்டு சிரித்து கொண்டிருக்கிறார்கள். பக்தி என்பது உள்ளதை சார்ந்தது , உணவை சார்ந்தது அல்ல


veera
பிப் 03, 2025 10:40

அவர்கள் பிரியாணி சாப்பிடும் போது நீயும் உன் கருத்தும் கோமாவில் இருந்ததா?


Svs Yaadum oore
பிப் 03, 2025 10:51

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னவன் எவன்? திருப்பதி கோவில் உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு எதுக்கு என்று கேட்டது யார்? இவனுங்கதான் பெரிய பகுத்தறிவு வாதிங்க..இவனுங்கதான் அமைதியை விரும்பறவனுங்களாம் ...


Svs Yaadum oore
பிப் 03, 2025 10:52

கிராமத்து கோவிலில் ....


Madras Madra
பிப் 03, 2025 11:04

முருகன் மலை மீது தர்கா கட்டுவதுதான் பிரிவினை விதைக்கும் செயல் உங்களால் அதை உணர முடியாது அவரவர் நம்பிக்கையை மதிப்பதுதான் உண்மையான அன்பு வேண்டும் என்றே ஆக்ரமித்து அவமதிப்பதை உலகெங்கும் செய்து கொண்டிருப்பது யார் என்று உலகுக்கே தெரியும் நீங்கள் உங்கள் கருத்தை சீர் தூக்கி பாருங்கள்


Mettai* Tamil
பிப் 03, 2025 11:57

பக்தி என்பது உள்ளத்தை சார்ந்தது, உணவை சார்ந்தது அல்ல.


Mettai* Tamil
பிப் 03, 2025 12:14

நாடு சுதந்திரம் பெறப்பட்டதிற்கு முன்பிருந்தே, ஹிந்துத்வா அமைப்பினர் பதிலடி தான் கொடுத்து வருகிறார்கள் ..1906 ல் மதவாத முஸ்லீம் லீக் உருவானது. அதற்க்கு பிறகே RSS உதயமானது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி பாகிஸ்தான் வங்கம் என முஸ்லீம் நாடாக அறிவித்தது ஏன்? இந்தியா மட்டும் மதசார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்ற ஜின்னாவின் பிடிவாதத்தை காந்தி ஏற்றுக் கொண்டது ஏன்? அதற்கு பிறகு நடந்த எல்லா கலவரத்திலும் ஹிந்துத்வா அமைப்பினர் பதிலடி தான் கொடுத்திருப்பாங்க. அவர்கள் என்ன செய்தாலும் எதிர்வினை கூடாது என்கிறீர்களா ??


Anand
பிப் 03, 2025 13:57

//முஸ்லிம்கள் அமைதியாக அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள்// இது போதுமே, நீ யாரென்று தெரிந்துக் கொள்ள, நீ என்னதான் ஹிந்து வேடம் தரித்து முச்சந்தியில் நின்று உச்சுக்கொட்டினாலும், மண்டையில் இருக்கும் கொண்டை உன்னை மூர்க்கன் என தெள்ளத்தெளிவாக காட்டுகிறது...


Kasimani Baskaran
பிப் 03, 2025 14:02

ஆறாவது அறிவு இல்லை என்றால் எல்லா உயிர்களையும் கொல்லலாம் என்ற எண்ணம் வரும். நீங்கள் ஐந்தா அல்லது ஆறா? ஆடு வெட்டுகிறார்கள் என்பதெல்லாம் பொய்யான செய்தி.


Kumar Kumzi
பிப் 03, 2025 14:20

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய ஒனக்கு சம்பந்தமில்லாத விடயங்களில் மூக்கை நுழைக்காதே


SIVA
பிப் 03, 2025 14:46

பக்தி என்பது உள்ளத்தை சார்ந்தது என்றால் யாரும் கோவிலுக்கு போக கூடாது, சர்ச் போக கூடாது, மசுதி செல்ல கூடாது , அவரவர் வீட்டில் இருந்து இறைவனை பிரார்த்திக்க வேண்டும் ....


சமீபத்திய செய்தி