உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

ஈரோடு: திராவிட குப்பைகளை உரமாக்கி, தமிழ் தேசிய மரத்தை பெருமரமாக்கி விட்டு தான் போவோம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார். பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம், ஆளும் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் இடையே நேரடி போட்டியாக மாறி உள்ளது. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது; என் இன வரலாற்றை திராவிட குப்பையை போட்டு மூடி வைத்துள்ளனர். அதன் மீது பற்ற வைத்த நெருப்பு தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது. என்னை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பாவும் (முதல்வர் ஸ்டாலின்), மகனும் (உதயநிதி) விழுப்புரத்தில், திண்டிவனத்தில் பேசுவது வேண்டாம். எல்லாரும் இங்கு வந்து ஈரோட்டில் பேசுங்கள். இவ்வாறு சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென எழுந்து நின்று சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சாட்டை துரைமுருகன், ஹூமாயுன் ஆகியோர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தவரின் அருகில் சென்றனர். அவரிடம் பேசும் போது மேடையில் இருந்து கைகாட்டி சீமான் குறுக்கிட்டார். பின்னர் ஹூமாயுன் எதிர்ப்பாளரை கைகளை பிடித்து அழைத்து வந்து முதல் வரிசையில் அமர வைத்தார். தொடர்ந்து சீமான் பேசியதாவது: நாங்கள் திராவிட குப்பைகளை உரமாக்கி, தமிழ் தேசிய மரத்தை வளர்க்க வந்த பிள்ளைகள். பெருமரமாக்கிவிட்டு தான் போவோம். சாதி, மதம் என பிளந்து பிரிந்து நின்றீர்கள் என்றால் அச்சுறுத்தப்படுவீர்கள், தனிமைப்படுத்தப்படுவீர்கள். இனம், மொழியாக இணைந்து நின்றீர்கள் என்றால் நீங்கள் வலிமை பெறுவீர்கள். பாதுகாப்பாக இருப்பீர்கள்.பாதுகாப்பாக, வலிமை பெற வேண்டும் என்றால் நாங்கள் தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்துக்குள் திரள தொடங்குங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

நாஞ்சில் நாடோடி
ஜன 29, 2025 17:31

முதலில் குப்பையை கொளுத்த வேண்டும். பின் உரமாக்க வேண்டும்...


K.Ramakrishnan
ஜன 29, 2025 16:35

திரள தொடங்குங்கள் என்று சொல்கிறவர் திரள் நிதி கேட்பார். பார்த்துங்கோ... இருக்கிறவர்கள் எல்லாம் கட்சி மாறுகின்றனர்.இனி யார் இவர் பின்னால் போவார்கள்-?


Rajah
ஜன 29, 2025 14:44

கடவுள் மறுப்பு என்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அவர்களோடு கூட்டணி வைப்பதும் இஸ்லாத்திற்கு எதிரானது. சவுதியில் ராமசாமியின் கொள்கை பற்றி பேசினால் தலை போவது நிச்சயம். ஆனால் இங்குள்ள முஸ்லிம்கள் கடவுள் மறுப்பு புள்ளிகளோடு கூட்டணி. ஒரு படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் புரட்சிசெய்கின்ரீர்கள். திராவிடமும், போலி காங்கிரஸும், இதர அடிமைக்கட்சிகளும் சிறுபான்மையினரை மூளை சலவை செய்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.


Rajah
ஜன 29, 2025 14:34

சீமான் வன்னி சென்றிருந்த போது, தலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானுக்கு நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கியதாகவும், அதனை தான் நேரில் கண்டதாகவும் அவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக தளங்களில் இருக்கிறது. அத்தோடு சீமான் கூறிய எகே74 என்ற துப்பாக்கியை பிரபாகரன் வைத்திருந்ததாகவும் கூறியிருக்கின்றார். இதை சீமான் கூறியபோது அது எகே74 அல்ல அது எகே47 என்று சீமானை கேலியும் செய்திருக்கின்றார்கள். ராமசாமி பற்றிய சீமானின் கருத்து தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனைத்து திராவிட மற்றும் அடிமை கட்சிகள் சீமானுக்கு எதிரான பொய் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரிகின்றது. இதற்கு பிரபாகனின் சகோதரனையும் கொண்டுவந்துள்ளார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் இதற்கு துணை போய் இருக்கிறது. இருந்தாலும் ராமசாமியின் கொள்கைகள் சீமானால் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை.


SUBRAMANIAN P
ஜன 29, 2025 14:08

கட்சியிலிருந்து குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சீமான் பேசட்டும். அது இல்லாமல் பேசும் பேச்சு வெத்து கூச்சல். திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக இது எந்த கட்சிக்கும் சீமானின் நாதக வுக்கும் வித்தியாசம் இல்லை..


Krishnamurthy Venkatesan
ஜன 29, 2025 13:48

ஈரோடு மக்கள் ஒருமுறை எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு தரவேண்டும். பின் அந்த சுகமே அலாதி தான்.


Kasimani Baskaran
ஜன 29, 2025 13:27

திராவிடத்துக்கு கெட்டகாலம் போல தெரிகிறது. பொதுமக்களை பணம் கொடுத்து ஆட்டு மந்தை போல அடைத்து வைத்து ஓட்டுப்போட வைப்பது - சர்வாதிகாரம்.


kantharvan
ஜன 29, 2025 14:12

ஆதிக்க கற்பனை?? மக்களை மாக்களாக கருதும் அதிகாரப்போக்கு?? மக்களை மக்களாக மதிக்கவே சுயமரியாதை, திராவிடம் மானமும் அறிவுமே மறத்தமிழருக்கு அழகு. சர்வாதிகார கயவர்கள் களத்தை விட்டு ஓட்டம் பிடித்ததுதான் இன்றைய செய்தி நாளைய வரலாறு


Barakat Ali
ஜன 29, 2025 13:16

உரமாகாது ....


Barakat Ali
ஜன 29, 2025 17:08

லம்லம் எப்படி உரமாகும் ????


Sivasankaran Kannan
ஜன 29, 2025 13:04

...இன்னும் நல்ல உரம்.. அதை விட கேவலமானது இந்த திராவிடம்.. தமிழ்நாட்டை காப்பாற்ற அந்த உரத்தை உபயோகிக்காமல் சொந்தமாக யோசியுங்கள்.. பிரபாகரன் கதையை இனி கேட்க முட்டாள் தம்பிகள் தயாராக இல்லை.. வேற ஏதாவது கூவ வேண்டியதுதான்..


R S BALA
ஜன 29, 2025 12:13

வாழ்வா சாவா என்ற முடிவுக்கு சீமான் வந்துவிட்டார் போல தெரிகிறது..


சமீபத்திய செய்தி