உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங்.,கிற்கு புதிய தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்.,கிற்கு புதிய தலைவர் செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை :தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக, செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவராக, 2019ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்தது. அவர் ஐந்து ஆண்டுகளாக நீடிப்பதால், தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என, தகவல் வெளியானது. அப்பதவிக்கு, முன்னாள் தலைவர்கள் பலரும் முயற்சித்தனர்.இந்நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை காங்கிரஸ் தலைவராக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nj80pu7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளசெல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம், புதியதமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றில் இருந்தவர்; பகுஜன் கட்சி மாநில தலைவராகவும் இருந்தவர். கடந்த 2010ல், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.கடந்த 2006ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலுார் மாவட்டம், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 சட்டசபை தேர்தலில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Dharmavaan
பிப் 18, 2024 07:18

இது சுடாலினின் சிபாரிசாக இருக்கும்


Karthick
பிப் 18, 2024 06:59

See the published photographs and it a curse of the people of Tamilnadu to have them as so called leaders.


Kasimani Baskaran
பிப் 18, 2024 06:55

என்றோ தீம்காவுக்கு விற்றப்பட்ட கட்சி... யார் தலைவரானால் என்னதான் ஆகிவிடப்போகிறது..


meenakshisundaram
பிப் 18, 2024 06:12

இனிமே காங் விளங்கிடும் -ஆனா ஒன்னு இவன் அடிக்கிற ஜால்ரா அழகிரியின் ஜால்றா வை மிஞ்சுமா ?


kijan
பிப் 18, 2024 04:17

என்னங்க ....கட்சிக்காக அழுது அழுது சீட் வாங்கியவரை இப்படி பொசுக்குன்னு ஒரு லெட்டர்ல வீட்டுக்கு அனுப்பிச்சிடீங்க ...? அண்ணன் அழகிரி .... ரோஷத்துடன் பா.ஜவில் சேரவேண்டும் ....


Raj
பிப் 18, 2024 00:42

ஓடாத குதிரை வண்டிக்கு எதுக்குப்பா குதிரை... இதுல 40 க்கு 40 தாம்..... உன்னோடு சிரிப்புலே தெரியுது...


nv
பிப் 18, 2024 00:23

மிக அருமை.. அண்ணாமலை இன்னும் நன்கு வெளிச்சம் போடப் பட்டு பளிச் என்று தெரிவார்கள்!! காங்கிரஸ் சீக்கிரம் தொலைந்து விடும்..


Ramesh Sargam
பிப் 18, 2024 00:17

அழகிரி முகத்தை பாருங்கள். ஒரே கோபம், சோகம். என்னதான் புது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பழைய தலைவர் என்பதால், அழகிரிக்கு பழைய படத்தை போடுவது சரியல்ல. புது தலைவருக்கு புது படம். இப்படித்தான் எல்லா 'பழைய' தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் நடத்தப்படுவார்கள். கொடுமை.


sankaranarayanan
பிப் 18, 2024 00:04

இனி பெருந்தொகை, தமிழகத்தில் கைமாறும் பெருந்தகையினால் பார்ப்போம் அனுபவிப்போம்


Sankar Ramu
பிப் 17, 2024 23:39

இப்பயே ராகுலுக்கு அடிமையா? ????????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை