உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை: அதிகாரியை வசைபாடிய செல்வப்பெருந்தகை: செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு

ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை: அதிகாரியை வசைபாடிய செல்வப்பெருந்தகை: செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க தொகுதி எம்எல்ஏவான தன்னை அழைக்காத அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்து கொண்டார்.

நீர் வெளியேற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து இன்று (அக்.22) காலை நிலவரப்படி 2170 கன அடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pfnvr59v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஏரியைில் ஆய்வு

இந்நிலையில் மெ்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து, தொகுதியின் மக்கள் பிரதிநிதியான என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவரும் , ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

இதெல்லாம் தப்பு

அந்த ஏரியை பார்வையிட்ட போது அவர் கூறியதாவது: ஒரு மக்கள் பிரதிநிதியாக சேர்மனுக்கு தெரியல மந்திரிக்கு தெரியல. அமைச்சருக்கு தெரியல.எம்எல்ஏவுக்கு தெரியல. எம்பிக்கு தெரியல. நீங்களே திறந்து விடுறீங்கனா எப்படி சார் அது. இந்த துறை வந்து அரசு துறை தானே? நீர்வளத்துறை அரசுத்துறைதானே? மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். மரபு என்ன?காலம் காலமாக எப்பவுமே சொல்வீங்க நானும் 3 வருஷமா திறந்துவிட்டுருக்கேன். போன வருஷம் சொல்லாம கொள்ளாம திறந்துவிட்டுட்டீங்க. தப்பு கிடையாது.திறங்க. நீங்களே ஆட்சியாளர்களாக, நீங்களே மக்கள் பிரதிநிதிகளாக மாறுங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நான் தானே ஊர் ஊராக போகப்போறேன். '500 அடி திறந்துருக்காங்க. கொஞ்சம் கவனமா இருங்க' என சொல்லிக்கொண்டு எல்லா ஊருக்கும் போகப்போறேன். 12 13 ஊருக்கு 'புரோகிராம்' போட்டு போகப்போறேன். இதெல்லாம் தப்பு. இத சொல்லணும்ல.

சமாதானம்

நீங்களே மக்கள் பிரதிநிதியாகிவிட்டால் அப்புறம் எதற்கு கவர்மென்ட். அதிகாரிகளே 'கவர்மென்ட்ட' 'ரன்' பண்ணிக்கலாமே? இந்தத் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதுனே தெரியல போங்க எனக்கூறிவிட்டு சென்றார்.நடந்து சென்ற அவரை , அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், நேற்று 12 மணியில் இருந்து டிவியில் ஓடிக் கொண்டிருக்கு. 4 மணிக்கு திறக்கப் போறாங்கனு. பூசணிக்காய் உடைக்கிறீங்க. பூஜை போடுறீங்க. தேங்காய் உடைக்கிறீங்க. மக்கள் பிரதிநிதிக்கு ஒரு சேர்மன் இருக்கிறார். ஒன்றிய செயலாளர் இருக்கிறார். எம்பி எம்எல்ஏ இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொன்னால் என்ன கெட்டுப்போயிடும் உங்களுக்கு. அவ்வளவு 'பிரஸ்டீஜ்'.இவங்கல்லாம் திறக்கக்கூடாது தண்ணீய. இவங்கெல்லாம் தொடக்கூடாது.வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க இந்தத்துறை எனக்கூறிவிட்டு சென்றார்

மக்கள் பிரதிநிதி எதற்கு

காரில் ஏறி அமர்ந்த பிறகு அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், இவங்கெல்லாம் வரக்கூடாது. மக்கள் பிரதிநிதி வரக்கூடாது. இன்ஜீனியர் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றால் அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதி. எப்படி சிஎம் உழைக்கிறார்னு தெதரியும். டெபுடி சிஎம் உழைக்கிறார். அவங்கவுங்க ராத்திரி பகல் உழைக்கிறாங்க.எங்களை கூப்பிட்டு... இப்ப நான் 10 கிராமத்துக்கு போகப்போறேன். நான்தானே எல்லா கிராமத்துக்கும் போயிட்டு வந்து எல்லா கிராமத்துக்கும் எச்சரிக்கை சொல்லப்போறோம். சாப்பாடு அரெஞ்ச் பண்ணப்போறோம். நீங்களா பண்ணப்போறீங்க. திறந்துவிட்டு கம்முனு உட்காந்துருக்கீங்க. ஒரு வார்த்தை சொன்னால் என்ன குறைஞ்சு போயிடும்.டிவியில பார்த்துவிட்டு 4 ,5 மணி நேரமா டிரை பண்ணுறேன். மொபைல்போனை எடுக்க மாட்டேன்றீர்கள்.எத்தனை மிஸ்டு கால் இருக்கும் எனப் பாருங்கள். அதெல்லாம் பண்ணாதீர்கள். நான் எம்எல்ஏ பொறுமையா போறேன். இன்னொருத்தன் வந்தா பொறுத்துக்குவாங்களா? மக்கள் பிரதிநிதி வேலைய நீங்களே சேர்த்து செய்யுறீங்கனா அப்புறம் எதற்கு மக்கள் பிரதிநிதி?.ஒரு மரபுனு ஒன்னு இருக்குல.காலம் காலமாக பிரிட்டிஷ் ஆட்சிக்காரன் காலத்தில் இருந்து கூப்பிட்டு தான் வெச்சு பூஜை போட்டு திறப்பார்கள்.நீங்கள் அதை மாதிரி செய்யுங்கள். எங்களுக்கு இதனால் ஒரு சிறுமையும் இல்லை. சிறுமைப்படுத்துவதாக நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்கள் மக்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கப்போறோம். இவ்வாறு கூறிவிட்டு காரில் கிளம்பிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Matt P
அக் 22, 2025 23:49

கூட்டணி கட்சி ஆட்சி தலைவரையா கேட்க முடியும். வூருக்கு இளைச்சவன் அதிகாரிகள் தானே. முக்கிய அமைச்சரை கேட்கமாலா அதிகாரிகள் தொறந்திருப்பார்கள்.


sankaranarayanan
அக் 22, 2025 21:04

ஏரியை திறக்க தொகுதி எம்எல்ஏவான தன்னை அழைக்காத அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்து கொண்டார். யாரைக்கேட்டு திறக்க வேண்டும் எந்த தண்ணிராக இருந்தாலும் திராவிட மாடல் அரசு யாரையும் கேட்டு செய்யாது அதுவம் தண்னிர்தான் ஆட்சிக்கே பிரதானம் எந்த தண்ணீரும் திறக்க யாரையும் கேட்கவே அருகதை அல்ல ஏனென்றால் நாடே தண்ணீரில் முழுமையாக மிதந்து கிடக்குது அதான் அந்த தண்ணீர்தான் மக்களே சொல்ல வேண்டுமா இன்னும்


K V Ramadoss
அக் 22, 2025 21:02

அட இதுவும் நல்ல ஐடியாதான் .. எதற்கு எல்லோரையும் கூப்பிட்டு தம்பட்டம், வீண் செலவு... வேலை செய்யப்போவது என்னமோ அதிகாரிகள்தான்..


Krish_SI
அக் 22, 2025 21:01

அவர் கூறுவது என்னவென்றால் முதல்வர் துணை முதல்வர் இருவரும் நல்ல விளம்பரம் கிடைக்குது அனா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல னு எரிச்சல் ... மேலிடம் கட்டாயமா சோளக்கூடாதுனு சொல்லி வாய்வழி ஆர்டர் போட்டுருப்பாங்க


தமிழ் மைந்தன்
அக் 22, 2025 21:00

எல்லாம் சரி அரசியல் கட்சி ஒன்றிய செயலானர் எப்போ மக்கள் பிரதிநிதி ஆனார் குண்டாஸ் நிலுவையில் இருந்தால் இப்படியா மூளை வேலை செய்யும்


Vasan
அக் 22, 2025 20:29

திமுக ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டும், தன் கூட்டணி கட்சிகளுக்கு, என்றே கருத்து சொல்லத்தோன்றுகிறது. அதுவும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது. மத்திய ஒன்றிய ஆட்சியில் காங்கிரஸ் கொடுத்தது, ஆனால் அந்த பெருந்தன்மை ஏன் திமுகவிற்கு இல்லை என்றே கேள்வி கேட்க தோன்றுகிறது


Sai
அக் 22, 2025 20:18

முதல்ல திராவிட மாடல் ஆட்சியில ஒரு அணை கட்டச் சொல்லுங்க. அதற்கான பூமி பூஜை அல்லது அடிக் கோல் விழா இதற்கு உங்கள கூப்பிடலன்னா கேள்வி கேளுங்க. அத விட்டுட்டு பாசனத்திற்கா தண்ணீர் திறந்து விட்டுறாக்கங்க ? நீங்க வந்து தலைய காண்பிக்க! தண்ணீருக்கு தெரியுமா செல்வப் பெருந்தகை யாரு? சாதா பெருந்தகை யாருன்னு? அணையைத் திறந்த அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமலா திறந்திருப்பார்கள்? எதில் விளம்பரம் தேடுவது என்ற விவஸ்தை வேண்டாம்?உங்கள மாதிரியான ஆட்கள வைத்துக் கொண்டு எப்படி இந்த அரசுக்கு நற்பெயர் கிடைக்கும்? நீங்களே இதற்கான பதிலை சொல்லுங்க!


V Venkatachalam, Chennai-87
அக் 22, 2025 20:16

வாய் இருக்கு. பேசலாம். பெரிய வாய் இருந்தா நிறைய பேசலாம். திருமாவை கூட ஒரு பங்கில் சேத்துக்கலாம். இவரை அதிலும் சேத்துக்க முடியாது. தனது சொந்த விஷயத்தில சவுக்கு சங்கர் வீட்டை நாற அடித்தவர் தானே இவர். இன்னிக்கு வரை தப்பித்து கொண்டு இருப்பினும் நாளை அப்படியே இருக்கும் ன்னு யாருக்குமே தெரியாதுங்குறதை இந்த ஆளுக்கு யாராவது ஞாபகப்படுத்தணும்.


Raj S
அக் 22, 2025 23:16

சந்தடி சாக்குல கொட்டை எடுத்த சிறுத்தையை சேத்துக்கலாமா?? ரெண்டும் ஜாதிய வெச்சி பொழப்ப நடத்தறவனுங்க... எந்த கொள்கையும் கிடையாது...


v srinivasan
அக் 22, 2025 20:02

சிட்டிக்கு கோவம் வருது வசி எந்திரன் வசனம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு வேளை கூட்டணி மாற மேலிடம் முடிவு செய்து விட்டதோ


தமிழ்வேள்
அக் 22, 2025 19:59

வெள்ளம் வந்தால், இந்த மக்கள் பிரதிநிதி காணாமல் பூடுவார்.. விசய் யோடு போய் ஒட்டிக்கொள்ள வேண்டும்.. எனவே, திருட்டு திமுகவை கழற்றி விட/ கழன்று கொள்ள சண்டை வலிக்கிறார் செல்லாப் பெருந்தகை...


K V Ramadoss
அக் 22, 2025 21:04

வெள்ளம் வந்தால், பழி அதிகாரிகள்மேல்தான் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை