உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செமி கண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் கொள்கை: தமிழக அரசு வெளியீடு

செமி கண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் கொள்கை: தமிழக அரசு வெளியீடு

சென்னை : எலக்ட்ரானிக்ஸ் மற்றும், 'செமி கண்டக்டர்' என்ற குறை கடத்திக்கான கொள்கையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

40 சதவீதம்

அதில், கூறியிருப்பதாவது: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையை விரிவுபடுத்துவது, செமி கண்டக்டர் என்ற குறை கடத்தி உற்பத்திக்கான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது, கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில், 40 சதவீதத்தை, தமிழகம் எட்டும் நிலையை ஏற்படுத்துவது என, இந்த கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை

அதேபோல முதலீட்டாளர் மாநாட்டில், 2030ம் ஆண்டிற்குள், 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை அடைவதற்கான திட்ட அறிக்கையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது.அதில் பயிர் மற்றும் வேளாண்மை செயல்முறை, மீன்வள மேம்பாடு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் தொழிலை மேம்படுத்துவது, ரசாயனம், இயந்திரவியல், தோல் பொருட்கள், துணிநுால் துறை, சுற்றுலா, வர்த்தகம், நிதி சேவைகள் போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக போக்குவரத்து, குடிநீர், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, சிறு, குறு தொழில் மேம்பாடு, சரக்கு போக்குவரத்து மேம்பாடு, வெளிநாட்டு, வெளிமாநில முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, திட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை