உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு: இ.பி.எஸ்., சொல்வது இதுதான்!

சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு: இ.பி.எஸ்., சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகரை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., 'தி.மு.க., போல் எங்கள் கட்சியில் யாரும் அடிமை கிடையாது' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4mp62twp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அடிமை அல்ல!

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது பற்றியும், சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சென்று சந்தித்தது குறித்தும், இ.பி.எஸ்., இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது:ஏன் சந்திக்கவில்லை என்பதை அவரிடம் (செங்கோட்டையன்) சென்று கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னைகளை இங்கு பேச வேண்டாம். தி.மு.க.,வினர் போல் அ.தி.மு.க.,வினர் அடிமை அல்ல. அ.தி.மு.க.,வினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். என்றைக்கும் நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவர் கிடையாது.

எதிரி தி.மு.க., தான்

தி.மு.க.,வை போல் வாரிசு அரசியல் கிடையாது. குடும்ப கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சி கிடையாது. சுதந்திரமாக அனைவரும் செயல்படுகிறோம். நான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான். அதை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். அ.தி.மு.க.,வில் தான் சுதந்திரம் கொடுக்கிறோம்' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

மறுப்பு

இ.பி.எஸ்., கருத்து குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து பேச வேண்டாம்' எனக் கூறி சென்று விட்டார்.இன்று சனிக்கிழமை மாலை செங்கோட்டையன் அளித்த பேட்டி:சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது வழக்கம். எனது தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுப்பதற்காக சென்றிருந்தேன். சுற்றுச்சூழல் அமைச்சரும் அங்கே வந்திருந்தார். அவரிடமும் அந்த கடிதத்தை கொடுத்தேன். இன்று கூட ஆறேழு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை சந்திக்க வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaranarayanan
மார் 15, 2025 19:49

செங்கோட்டையன் என்ற பெயர் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எப்படியாவது செகோட்டையன் என்பவர் செங்கோட்டைக்குள் புகுவதற்கு எந்த கட்சியிலாவது சேர்ந்து எப்படியாவது கோட்டைக்குள் நுழைய வேண்டும் இதுதான் அவரது லட்சியமாம்...


rama adhavan
மார் 15, 2025 16:28

கண்டிப்பாக நடக்காது. செங்கோட்டையன் அணில் அல்ல. தன்மானம் மிக்கவர்.


S.L.Narasimman
மார் 15, 2025 16:18

ஏன் திமுக எம்பிக்கள் கூட அப்ப அப்ப டில்லியில் மத்திய மந்திரிகளை சந்திக்கிற


Perumal Pillai
மார் 15, 2025 15:35

இந்த dmk அடிமை அந்த கட்சி ஜெயிப்பதற்கான கூட்டணி அமைப்பது உள்ளிட்ட எல்லா அண்டர் கிரவுண்ட் வேலையும் பார்ப்பார் dmk பதிலுக்கு கொடநாடு கொலை கொள்ளை கேஸை ஆறப்போடுவார்கள் . செய்யும் தொழில் ஒரு விதம் ஆனால் கொப்பளிப்பது மட்டும் பன்னீர் .


Subramanian N
மார் 15, 2025 15:33

செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக செங்கோட்டையன் திமுகவின் தூண்டிலில் சிக்குவார்


madhes
மார் 15, 2025 15:01

பழனிச்சாமியோட மகன்தானே டெல்லி வரைக்கும் போயிட்டு அமித்ஷா கூட சமாதானம் பேசுனது, அப்போ அது வாரிசு இல்லையா ?


GMM
மார் 15, 2025 14:20

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. திமுக கூட்டு மூலம் காங்கிரஸ் ஒரு வார்டு கூட தனியாக போட்டியிட முடியாத நிலை. வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்கவில்லை என்றால், அண்ணா திமுக கோஷ்டிகள் அரசியல் விட்டு விலகும் நிர்பந்தம் வரும். மத்தியில் திமுக ஆதரவு கட்சி அமையாது. ? மாநில திமுகவுடன் ஐக்கியம் அல்லது வலுவான எதிர் கூட்டணி அல்லது திகார், புழல் விருப்ப தேர்வு . வக்கீல், அதிகாரிகள் மாறி வருகின்றனர். தண்டனை கடுமையாக இருக்கும்.


Kumar Kumzi
மார் 15, 2025 14:17

அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்படும்


Anantharaman Srinivasan
மார் 15, 2025 13:54

கட்சிக்குள் மௌனபுரட்சி புகைந்துகொண்டிருக்கிறது.


Palanisamy Sekar
மார் 15, 2025 13:41

பழனிசாமி செய்துகொண்டிருப்பது கட்சியை மிகவும் பலவீனமாக கொண்டு சென்றுவிடும் என்பதை அறிவாரா இல்லை... திமுகவின் கள்ள உறவில் கட்சியை அழிக்க நினைக்கின்றாரா என்ன? பிரிந்தவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்துவதற்கு விடுத்து என்னென்னமோ உளறிக்கொண்டிருக்கின்றார். சுதந்திரம் சுண்ணாம்பு என்று. கட்சியில் மீதமுள்ள இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஒன்றுகூடி பழனிச்சாமியை பதவியிலிருந்து விடுவித்துவிட்டு புதிய தலைமையை தேர்வு செய்திட வேண்டும். செங்கோட்டையன் போன்றோர் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள். அவரைப்போன்றோர் தலைமைக்கு வருவார்கள் என்றால் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். வருகின்ற தேர்தலில் பலமான கூட்டணியை ஏற்படுத்த முடியுமே. ஈ பி எஸ் வந்தபிறகு தொண்டர்களுக்கும் சரி இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் அவ்வளவாக உற்சாகமே இல்லை என்பதுதான் உண்மை இனி சிந்திக்க வேண்டியவர்கள் தேமேன்னு இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள்தான் .


Suppan
மார் 15, 2025 16:40

எஸ் டி பி ஐ போன்ற வகுப்புவாத , மதவாத பிரிவினைவாத தேசத்துரோகக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை கவர்ந்து விடலாம் என்று கனவு கண்டார் இ பி எஸ். அது பலிக்கவில்லை. "பழைய குருடி கதவைத் திறடி" என்ற கதையாக திரும்பவும் பாஜகவுடன் கூட்டு சேர்வதைத்தவிர வேறு வழியில்லை என்று உணர்வார்.


சமீபத்திய செய்தி