உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி சப்போர்ட் இல்லாமல் வெற்றி: ஜோதிமணி ஆதரவாளர்கள் அலப்பறை

செந்தில் பாலாஜி சப்போர்ட் இல்லாமல் வெற்றி: ஜோதிமணி ஆதரவாளர்கள் அலப்பறை

கரூர் : செந்தில்பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல், ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் பதிவால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.கடந்த, 2019 கரூர் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் ஜோதிமணி, 4.20 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை முன்னாள் அமைச்சரும், தி.மு.க., மாவட்ட செயலருமான செந்தில்பாலாஜி சாத்தியப்படுத்தினார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, செந்தில்பாலாஜி-ஜோதிமணி இடையே மோதல் ஏற்பட்டது.இதனால் இந்த லோக்சபா தேர்தலில், ஜோதிமணிக்கு சீட் கொடுக்க, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பாளர் ஜோதிமணி அறிவிக்கப்பட்ட பின், தொடக்கத்தில், தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. பின், தலைமை எச்சரிக்கையால், தி.மு.க., வேண்டாத வெறுப்பாக தேர்தல் பணிகளை செய்தனர். 1.66 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த தேர்தலை விட, 2.54 லட்சம் ஓட்டுக்கள் குறைந்துள்ளது.எம்.பி.,ஜோதிமணி, தன் 'எக்ஸ்' தளத்தில் வெற்றிக்கு நன்றி தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.அதில், 'நமக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய் பிரசாரங்களை முறியடித்து, மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பரிசளித்த, எமது கரூர் லோக்சபா தொகுதி சொந்தங்களின் மகத்தான அன்பிற்கும், ஆதரவிற்கும் தலை வணங்குகிறேன். மகத்தான வெற்றியை பரிசளித்த எமது மக்களுக்கும், இந்த வெற்றிக்காக அயராது அர்ப்பணிப்போடு உழைத்த இந்தியா கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து அதே அர்ப்பணிப்போடும், நேர்மையோடும் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம். சிறப்பான எதிர்காலத்தை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்' என குறிப்பிட்டுள்ளார்.காங்.,-தி.மு.க., தலைவர்களின் பெயரை பதிவிட்டால், செந்தில்பாலாஜியை குறிப்பிட வேண்டும் என்பதற்காக, அனைத்து தலைவர்கள் பெயர்களை பதிவிடவில்லை. அந்த ட்விட்டின் கீழ், அவரது ஆதரவாளர்கள் செந்தில்பாலஜிக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.அதில், 'செந்தில்பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல் ஜோதிமணியின் உழைப்பிற்காக கிடைத்த வெற்றி எனவும், நீ செந்தில்பாலாஜியை விட பெரிய ஆள். வாழ்த்துக்கள் அக்கா, தி.மு.க.,விடமிருந்து வெளியே வாருங்கள். மதிப்பு மரியாதை முக்கியம்' என, பதிவிட்டு வருகின்றனர்.செந்தில்பாலாஜி ஆதரவில் ஜெயித்து விட்டு, ஜோதிமணி ஆதரவாளர்கள், மாற்றி பதிவிட்டு வருவது தி.மு.க.,வினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rajah
ஜூன் 07, 2024 18:50

இவரைப்போல் இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இந்த டிவி விவாத மேடைகளில் வருவார்கள். இவர்களுக்காகவே பெண்களுக்கான இலவச சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும்.


shakti
ஜூன் 07, 2024 18:42

ஜோதிமணி முதலியாரா கொக்கா


sankar
ஜூன் 07, 2024 15:15

பாராளுமன்றம் செல்வதற்கு சில தகுதிகளை நிர்ணயிக்கவேண்டும் - வெறும் குழாயடி சண்டை பார்ட்டிகள் எல்லாம் வெல்வது வருத்தம் அளிக்கிறது


sridhar
ஜூன் 07, 2024 13:55

திமுக கூட்டணியில் ஒரு தென்னைமரத்தை நிற்க வைத்தால் கூட வெற்றி பெரும், தமிழக ஹிந்துக்கள் அவ்வளவு ரோஷம் உள்ளவர்கள் .


Lion Drsekar
ஜூன் 07, 2024 13:44

மாண்புமிகு ஐயா வித்திட்டது ஆலமரம் போல் எல்லா சாராயக்கடைகளிலும் சீரும் சிறப்புமாக முன்பு வாங்கிய தொகையை விட மிக அதிக அளவில் ஒவ்வொருபாட்டிலுக்கும் நேர்மையாக வாங்குகிறார்கள் . அமைச்சர் பெருமானை மாற்றியபிறகு மேலும் களைகட்டுகிறது என்றால் இவரது சக்திக்கு ஈடு இணை உண்டோ . பாவம் சுய தொழில் செய்பவர்கள் கடைகளில் , தொழிற்சாலைகளில் , விற்பனை வரியாளர்கள் துறைகள் தீபாவளி, புத்தாண்டு , பொங்கல் நேரங்களில் அமலாக்கத்துறை என்ற ஒரு அமைப்பின் மூலம் வந்து மிக அழகாக தன கடமையை செய்து அதிக விலைக்கு விற்று நிறுவனங்களில் நடந்த குளறுபடிக்கு ஏற்ப ...??? தண்டனை விதித்து நடவடிக்கை எடுப்பதுண்டு , அதே ஒன்று ஏன் சாராயக்கடைகளில் நடத்தப்படவில்லை . அப்படி நடத்துவது தவறு என்றால் தரமான சரக்கை கொடுக்கலாம் அல்லவா ? இராணுவத்துக்கு யார் தயாரிக்கிறார்களோ அவர்களிடம் கொள்முதல் செய்யலாமே . தரமாவது நன்றாக இருக்குமே . ஏழை சொல் அம்பலத்தில் எடுபடாது என்பது தெரியும், வந்தே மாதரம்


Barakat Ali
ஜூன் 07, 2024 13:29

ஒண்ணுக்குள்ள ஒண்ணு ....... அப்புறம் என்ன கவலை ??


Anand
ஜூன் 07, 2024 12:59

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சேவை செய்ய கொடுத்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் யோகம் வேண்டும்.


Lion Drsekar
ஜூன் 07, 2024 11:11

உங்களைப் போல நல்லார். ஊரில் யாவர் உள்ளார்?? எங்களால் உங்களுக்கு தொல்லை. ஏதும் இங்கே இல்லை. ஐயம் இன்றிச் சொல்வேன். ஒற்றுமை என்றும் பலமாம். ஓதும் செயலே நலமாம். ஒளவை சொன்ன மொழியாம். அஃதே எங்களுக்கு வழியாம். வந்தே மாதரம்


Anand
ஜூன் 07, 2024 10:53

...நின்றிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும். அப்படி பட்ட வாக்காள பெருமக்களை கொண்டது நம் மாநிலம்.


Raa
ஜூன் 07, 2024 10:51

எதுக்கு எப்படி தேர்தல் களம் வெளிவந்து போட்டி போடணும்? ராஜினாமா பண்ணிவிட்டு அதே தொகுதியில் அக்காவும், ஜாமீன் புகழ் அண்ணனும் மற்ற கட்சிகளும் இடைத்தேர்தல் போட்டு நிரூபிக்கலாமே? நாங்களும் சாயம் வெளுப்பதை பார்ப்போமே?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை