உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சென்னை:தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: காச்சிக்குடா - மதுரை இடையே, திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஆக., 18 முதல் வரும் அக்., 13ம் தேதி வரை, மதுரை - காச்சிக்குடா இடையே, புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஆக., 20 முதல் வரும் அக்., 15ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். ஐதராபாத் - கன்னியாகுமரி இடையே புதன்கிழமை் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் ஆக., 13 முதல் அக்., 8ம் தேதி வரை, கன்னியாகுமரி - ஐதராபாத் இடையே வெள்ளிகிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஆக., 15 முதல் அக்., 10ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு, முன்பதிவு துவங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை