உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

 ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜன., 1 முதல், தலைமைச் செயலர் அந்தஸ்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2025 10:34

வரும் தேர்தலில் கழகம் மீண்டும் அரியணை ஏற இராப் பகலாக உழைக்கவும்


veeramani
டிச 25, 2025 10:22

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மனம் உவந்த வாழ்த்துகள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ