உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது

சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மலேஷியாவில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை, சர்வதேச சைபர் குற்றவாளிகள், 'டிஜிட்டல்' கைது செய்து, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, தமிழகத்தை சேர்ந்த நபர்கள், ஏஜென்ட்களாக செயல்பட்டு, வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, கமிஷன் பெறுவதாக, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டலுக்கு தகவல் கிடைத்தது.அவர்களை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏஜென்ட்களை போலீசார் தேடி வந்தனர். மார்ச், 31ல், சென்னையை சேர்ந்த பைசுனிஷா,48 என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது, சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்கு, உதவி செய்வதற்காக சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த பாய்ஸ்கான்,58, ஆட்களை வேலைக்கு எடுக்கும் தலைவராக செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, பாய்ஸ்கானை பிடித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையின் போது, அவர் பல தகவல்களை தெரிவித்தார். மதுரையை சேர்ந்த சேதுராமன், 29, வங்கியில் வேலை செய்கிறார். அவர் எங்களுடன் கூட்டுச் சேர்ந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கி கணக்குகள் துவங்க உதவி செய்தார். அவருக்கு கமிஷன் தொகையாக, பல ஆயிரம் ரூபாய் தரப்படும். இவர் தவிர, விழுப்புரத்தை சேர்ந்த செல்லத்துரை, 40; தேவி, 39, சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி, 34, சென்னை தாம்பரம் பாசில் அஹமத்,41, ஆகியோரும் உதவி செய்துள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்டோரை மூளைச்சலவை செய்து, அவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் துவக்கி, சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு விடுவர் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்களையும், போலீசார் கைது செய்தனர். ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதால், இவர்கள் மீது இந்தியா முழுதும், 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sudha
ஏப் 05, 2025 11:54

வங்கிகள் செயல்பாட்டை மாற்றி அமைத்தால் சைபர் கிரைம் ஒழிப்பில் உலகத்திற்கே நாம் வழி காட்ட முடியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 05, 2025 09:28

மக்கள் தொகையில் 20 சதவிகிதம் இருப்பவர்கள் இங்கே ஏழில் நான்கு பேர் ..... அதாவது 57 சதவிகிதம் ..... தொடரட்டும் இவர்கள் சேவை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 05, 2025 09:26

ஹிந்துக்கள் தங்கள் சொத்துக்களை இந்த ஏழைகளுக்கு கொடுத்து இவர்கள் செழித்து வாழ்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் ..... அப்படிக்கொடுத்து விட்டுத் தெருவில் நிற்க வேண்டும் ...... அதுதான் உண்மையான மத நல்லிணக்கம் .....


Yes your honor
ஏப் 05, 2025 08:56

ஏழு பேர் கைதானால் அதில் நாலு பேர் மூர்க்ஸ் இருக்கிறார்களே. ஒருவேளை அதனால் தான் அமெரிக்காவில் அமிர்கானையும் ஷாரூக்கானையும் ஒரு செக்யூரிட்டி கூட மதிப்பதில்லையோ?


sridhar
ஏப் 05, 2025 08:53

ஏழில் நாலு. நாம் தான் விழிப்போடு இருக்கவேண்டும்.


Barakat Ali
ஏப் 05, 2025 08:29

பெரும்பான்மையினருக்கு அவநம்பிக்கையும், வெறுப்பும் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டுவிட்டு பிறகு சகோதரா என்று கட்டிப்பிடித்தால் நம்புவார்களா ???? ஹராம் ஆக்கப்பட்டவைகளைச் செய்யக்கூடாது .....


Rajamani K
ஏப் 05, 2025 08:02

இந்தக் தொழிலில் பாருங்க, சூப்பரான மத நல்லிணக்கம்.


Thiyagarajan S
ஏப் 05, 2025 07:47

ஒரு பக்கம் வக்பு வாரியம் இந்துக்களின் சொத்துக்களை திருடுகிறது இன்னொரு பக்கம் இதுபோன்ற சைபர் குற்றவாளிகள் போர்வையில் இந்த அமைதி மார்க்கத்தினர் திருடுகின்றனர்....


Rajathi Rajan
ஏப் 05, 2025 10:57

தேவி, செல்லதுரை, சேதுராம, இவங்க ellam யாருடா உன் அப்பங்களா? சொல்லுடா தீப்பொறி திருட்டு தியாகு???


Sudha
ஏப் 05, 2025 07:13

மதம், இனம், மொழி எதுவும் தடை இல்லை சில தொழில் களுக்கு


Kalyanaraman
ஏப் 05, 2025 07:06

இந்த வழக்கு முடிவதற்குள் குற்றவாளிகள் இறந்து விடுவார்கள். அவ்வளவு வேகமாக வழக்கு நடக்கும். இறுதியாக பணத்தை போனது போனதுதான். எந்த காலத்துக்கும் கிடைக்காது. ஆனால், கிடைக்காத பணத்திற்கு மக்கள் வரிப்பணத்தில் நீதிமன்றம் செயல்படுகிறது. இது என்ன விந்தை. குற்றவாளிகளை வளர்த்து விடுவது நமது நீதிமன்றங்களும் சட்டங்களும் தான்.


Rama Chandran
ஏப் 05, 2025 08:02

நீதிபதிகளும் போலீஸ் அதிகாரிகலும் லஞ்சம் இல்லாமல் இருப்பதில்லை


புதிய வீடியோ