உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமான் கோரிக்கை ஐகோர்ட்டில் தள்ளுபடி!

பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமான் கோரிக்கை ஐகோர்ட்டில் தள்ளுபடி!

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற சீமான் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது புகாரின் சாராம்சம்.கடந்த 2011ல் அளிக்கப்பட்ட இந்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் அளித்திருந்தார்.அதன் அடிப்படையில் போலீசார் வழக்கை ஏற்கனவே முடித்து வைத்த நிலையில், மீண்டும் விஜயலட்சுமி தரப்பில் வழக்கை விசாரிக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது. வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, 'ஏற்கனவே 2011ம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். பின்னர் 2023ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டார். தற்போது தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.அதற்கு போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது' என்று தெரிவித்தார். 'சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது' எனக்கூறிய நீதிபதி, விஜயலட்சுமி வழக்கை தள்ளுபடி செய்யக் கூறி கொடுக்கப்பட்ட சீமான் வழக்கை தள்ளுபடி செய்தார்.மேலும் வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bye Pass
பிப் 17, 2025 23:14

அம்மணிக்கு ஆதரவா ஒரு பெண்மணி சவுண்டு விடுமே ..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 22:15

இந்த சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை யின் அண்ணன். அண்ணாமலை சீமானின் செகரேட்டரி. சீமான் பேச்சுக்களுக்கான ஆதாரங்களைத் தேடிக் குடுப்பார்.


Bye Pass
பிப் 17, 2025 23:10

நீங்க 200 உப்பி அவ்வளவு தானே


venugopal,S
பிப் 17, 2025 23:38

200 ரூவா வுக்கு கேவலமா முட்டு குடுப்பாரு


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 21:37

தறிகெட்டு நாவடக்கமின்றி பேசிய ராமசாமியை கடுமையாக கண்டித்தவர் சீமான். நேற்றைய அறிக்கையில் மும்மொழி கொள்கையை சீமான் ஏற்றுக்கொண்டுவிட்டார். பிஜேபி கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்பவர் சீமான். கிருத்துவ மதத்திலிருந்து ஹிந்துவாக மாறியவர். திமுகவின் தூண்டுதலின் பேரில் விஜயலட்சமி கேஸ் போட்டுள்ளார். சீமான் கருகலைக்க சொன்னார் என்று குற்றம் சுமத்த பட்டாலும், அதற்கு சம்மதம் தெரிவித்து அதை செய்தவர் விஜயலட்சமி தானே. இப்போது வெறுமனே சீமானின் மீது மட்டும் பழிபோடுவது ஏன்? சீமானுக்கு ஆதரவாக மத்திய அரசும் கோர்ட்டும் இருக்கும்.


பாலா
பிப் 17, 2025 21:12

திருட்டுத் திராவிடிய தெலுங்கன்கள் போட்ட பிச்சையில் நீதிபதியாகிவனின் நிதி சின்னமேளம்?


கோமாளி
பிப் 17, 2025 20:44

அது எப்புடி திமிங்கலம் தேர்தல் நேரத்துல மட்டும் அந்த நடிகை மனு குடுக்குது??


Barakat Ali
பிப் 17, 2025 20:24

அண்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியா இருக்கும்போது, டீம்காவை கிழி கிழி ன்னு கிழிக்கும்போது, டீம்கா கூக்குரல் இடும் ..... அப்போ அண்ணனை அடக்க, விஜயலட்சுமி அண்ணியும் கரெக்ட்டா வந்து சேர்ந்துருவாங்க ......


Vel1954 Palani
பிப் 17, 2025 19:57

அவள் அவன் ஆசை வார்த்தையை நம்பி அனுமதித்திருப்பாள். பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி இருப்பான்.


தமிழன்
பிப் 17, 2025 19:21

காசுக்காத்தான் இவரை மிரட்டுவது போல தெரிகிறது இல்லாவிட்டால் எதற்காக 2 முறை வழக்கை வாபஸ் பெற வேண்டும்?? இவரும் அவளிடம் விளையாடியிருக்கிறார் 2 பேரும் கேடிகள் இவரெல்லாம் தலைவன் இவருக்கு பின்னால் மந்தைகள் கூட்டம் வேற??? ரவுடிகள், பொறுக்கிகள் திருடனுகள்தான் அரசியலுக்கு வருகிறானுகள் என்ன செய்ய?? கலியுகம் இது


வீரபாண்டியன்,அலங்காநல்லூர்
பிப் 17, 2025 19:49

இந்தியாவால் தடை செய்யப் பட ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஃபோட்டோவை தன் கட்சி பிரச்சாரங்களில் விளம்பரப் படுத்தும் சைமன் என்ற சீமானை கைது செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு தைரியம் துணிச்சல் இருக்கிறதா?


visu
பிப் 17, 2025 20:50

காசுக்காக மிரட்டவில்லை காசாவது கொடு உனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்துவிட்டது என் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல் என்ற நிலை .இவரும் முறைப்படி காசாவது கொடுத்து சமாதானமாக போய் இருக்க வேண்டும் அதை விட்டு மிரட்டி அடக்க நினைத்தால் ?


Shankar
பிப் 17, 2025 19:01

வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டால் பணம் தருவதாக வெளியிலிருந்து சமரசம் ஆகியிருக்கும். வழக்கை திரும்ப பெற்றபிறகு சீமான் விஜயலட்சுமிக்கு அல்வா கொடுத்திருப்பார். அதனால் மறுபடியும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது என்ன கேள்வி நீதிபேதி அவர்களே. ஏற்கனவே வழக்கை ஆரம்பித்து பதினாலு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகப்போகிறதோ?


rajasekaran
பிப் 17, 2025 18:29

கருத்து கூற ஒன்றும் இல்லை


கந்தசாமி,மதகுபட்டி
பிப் 17, 2025 19:22

ஏலே சைமன் திமுகவிற்கு ஆதரவாக அண்ணா பல்கலை கழக பாலியல் வழக்கை ஈவெராமசாமி பேரை சொல்லி திசை திருப்பினாயே இப்போது இந்த வழக்குக்கு பதில் சொல்லு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை