உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறை பேராசிரியர்கள் மீது இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி குழு விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் முனைவர் பி.எச்டி பட்டம் பெறுவதற்காக பதிவு செய்தார். பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த இளம் பெண் உதவி பேராசிரியர், அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை கூறி புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 20:31

பல்கலைகழக வேந்தர் ஸ்டாலின் அவர்கள் விசாரணை விரைவு படுத்தி நீதி வழங்குவார்


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 16:27

இந்த கமிட்டி ஆய்ந்து அறிந்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து அது அந்த தலைமைக்கு அனுப்பி அச்சு அசலாக நம்முடைய நீதிமன்றம் போல ஒரு 20 வருடம் எடுத்துக்கொள்ளும்


உண்மை கசக்கும்
ஏப் 29, 2025 14:27

அண்ணா பல்கலை கழக பாலியியல் குற்றவாளி இன்னும் சந்தோசமாக இருக்குறான். ஒரு புண்ணாக்கும் புடுங்கல. இதில விசாக கமிட்டி விசாரிச்சு..


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 14:12

சார் வாள் களின் மாநிலம் என்று மற்றவர்கள் அழைக்க வாய்ப்புள்ளது


raja
ஏப் 29, 2025 14:08

மாடல் அரசில் ஏற்கனவே அண்ணா கல்லூரியில் பெண் மாணவிக்கு நடந்த பாலியலின் சூத்திரதாரியான அந்த சாரு யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க வக்குகில்லை... இதில் இது வேறா....எனக்கென்னவோ அகில இந்திய உதை ரசிகர் மன்ற தலைவரின் தலைவன் சின்னவனாக இருப்பானோ என்று தோன்றுகிறது...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 13:44

முதல்வர்கள் அதாவது பெரிய / மூத்த / முதன்மை சார்கள், பல்கலை வேந்தர்கள் ஆனால் பாலியல் வன்முறைகள் குறையுமா ??


VSMani
ஏப் 29, 2025 13:21

Phd வாங்குவது என்றால் சும்மாவா? அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் கிடைக்கும். Phd பண்ண விரும்பும் பெண்கள் பெண் guide ஐ தெரிவு செய்யவேண்டும். ஆண்களை தெரிவு செய்தால் இப்படித்த்தான் நடக்கும். ஆண்கள் ஆண்களிடமும் பெண்கள் பெண்களிடமும் கற்கவேண்டும். ஆண்களுக்கு ஆண்கள் பள்ளிக்கூடம், ஆண்கள் கல்லூரி ஆண்கள் ஆசிரியர்கள் என்றும் பெண்களுக்கு பெண்கள் பள்ளிக்கூடம், பெண்கள் கல்லூரி, பெண்கள் ஆசிரியர்கள் என்றும் ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் இந்த பாலியல் துன்புறுத்தல் இருக்காது. co-education tem நீக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 16:34

பெண் guide இருந்தால் என்ன அவள் கணவன் துணைவன் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பாள் அந்த பெண் guide??? அப்போது என்ன பண்ண முடியும்??? இதற்குத்தீர்வு இது மட்டும்தான். தவறு கண்டேன் சுட்டேன். பிறகு யாருக்கும் எந்த மாதிரி தவறும் செய்யும் எண்ணமே வராது. தவறு செய்பவர்கள் மேலுலகம் அனுப்பப்படுவர் என்று நிச்சயமாக தெரிந்த முடிவால்


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:47

புதுசா கருணாநிதி பெயரில் ஒரு பல்கலை உருவாகிறது.


மூர்க்கன்
ஏப் 29, 2025 13:28

அங்கேயும் எவனாவது வால் ஆட்டினால் ஒட்ட நறுக்கப்படும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:01

அவர் எழுதிய பலான பலான கதைகளை பாடமாக வைத்தால் எதிர்கால சந்ததிகள் தறிகெட்டுப்போக உதவியாக இருக்கும் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:05

பெரும்பான்மையினர் தேசிய நீரோட்டத்தில் கலந்தால் மூர்க்கனுக்குப் பிடிக்காது .... ஆகவே அதற்கு காரணமாக இருப்பவர்களின் வால்கள் நறுக்கப்படும் .....


சமீபத்திய செய்தி