உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்று வந்த அண்ணாமலைக்கு நான் பதில் சொல்வதா? டி.ஆர்.பாலு ஆவேசம்

நேற்று வந்த அண்ணாமலைக்கு நான் பதில் சொல்வதா? டி.ஆர்.பாலு ஆவேசம்

சென்னை:''அண்ணாமலை பற்றிய எந்த கேள்வியையும் என்னிடம் கேட்காதீர்கள்,'' என, தி.மு.க., - எம்.பி., பாலு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை, மத்திய அரசு கொடுக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த மாதம் 27க்குள் கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார்; இதுவரை கொடுக்கவில்லை. அதைத் தான் தி.மு.க., - எம்.பி., ராஜா கேட்டார். அதற்கு சபையில் உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அவர் வராமல், இணை அமைச்சரை பதில் அளிக்க கூறிவிட்டு சென்று விட்டார். இணை அமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கும்போது, இந்தத்துறைக்கே சம்பந்த மில்லாத அமைச்சர்முருகன் குறுக்கே புகுந்து பேசினார். இது பார்லிமென்ட் விதிமுறைக்கு முரணானது.எனவே நான், 'உங்களுக்கு பார்லிமென்ட் விதிமுறையே தெரியவில்லை; சும்மா உட்காருங்கள்' என்று கூறினேன். இது தவறா?கேள்வி கேட்டது ராஜா. அவரும் ஒரு தலித் தான். அவர் கேட்ட கேள்விக்கு, அதே தலித் இனத்தைச் சேர்ந்த அமைச்சர், அப்படி பதில் கூறலாமா? தமிழகத்தின் உரிமைக்காக கேள்வி கேட்கும்போது, அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத, அமைச்சர் முருகன் தேவையில்லாமல் தலையிட்டு, பிரச்னையை ஏற்படுத்துவ தோடு, திசை திருப்பினார். எங்கள் கட்சி, ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால், அவர்கள் தேவையில்லாமல் எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்கின்றனர். நான், 65 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவன். நேற்று வந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எல்லாம், பதில் கூற வேண்டுமா? அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போனேனா?தமிழகத்தின் உரிமையை பற்றி, தலித் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சரோ, இணை அமைச்சரோ பதில்கூறியிருக்க வேண்டும்.சம்பந்தமே இல்லாத அமைச்சர் வந்து பேசி விட்டு, 'நான் தலித்' என்று கூறுகிறார். நாங்கள் எல்லாம் என்ன தலித்துக்கு விரோதிகளா?ஹிந்துக்கள் என்றாலும் அவர்கள் தான்; தலித் என்றாலும் அவர்கள் தான். அப்படி என்றால் நாங்கள்எல்லாம் எதுவுமேஇல்லையா?முந்தாநாள் அரசியலுக்கு வந்த அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கிறீர்கள். இனிமேல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சம்பந்தப்பட்ட எந்த கேள்விகளையும், என்னிடம் கேட்காதீர்கள். அண்ணாமலை என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். நாங்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எங்களுக்கு அனைவரும் ஒன்று தான். என் தகுதிக்கு இணையானவர்கள் குறித்து மட்டும் என்னிடம் கேள்வி கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.மலிவான மனிதரா?டி.ஆர்.பாலு மலிவான மனிதரா என்பதை, அவரின்,65 ஆண்டு அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது. அவரின் சிந்தனைகளும், செயல்பாடுகளுமேதீர்மானிக்கும் என்பதை, அவருக்கு மிக பணிவன்புடன்தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணாமலைதமிழக பா.ஜ., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்