உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1 கோடி ஊழலால் அவமானம்; மேயரை வறுத்தெடுத்த கவுன்சிலர்கள்

ரூ.1 கோடி ஊழலால் அவமானம்; மேயரை வறுத்தெடுத்த கவுன்சிலர்கள்

தஞ்சாவூர்: 'தஞ்சாவூர் மாநகராட்சிக்கே உங்களால் தான் அவமானம்' என, மேயருக்கு எதிராக, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் கொதித்தனர்.தஞ்சாவூர் மாநகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமநாதன் தலைமையில் நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஆனந்த், நீலகண்டன் உள்ளிட்டோர் பேசியதாவது:கமிஷனரிடம் ஏதாவது கோரிக்கை வைத்தால், மேலிடத்தில் கூறி கட்சியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுகிறார். கருணாநிதி பெயரில் மாநாடு நடத்த அரங்கம் கட்டப்பட்டது. ஆனால், தனியார் தியேட்டர் அமைக்க அனுமதி கொடுத்தது யார்? அதில், கட்டத்தை இடிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்? இந்த விவகாரத்தில், கமிஷனர், மேயர் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர்.மாநாடு கட்டடத்தின் உள்பகுதியில் இடிக்க அனுமதி அளித்து விட்டு, முறையான ஆதாரங்களை கொடுக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கூறினால், 'நீங்கள் செய்து கொள்ளுங்கள்' என கூறுவது முறையா?மேயர் மீதான நிலம் வாங்கிய குற்றச்சாட்டிற்கு நாங்கள் கேள்வி எழுப்பிய பின்னரே பதில் அளித்துள்ளீர்கள். இதற்கு முன் இருந்த தலைவர்களால் மாநகராட்சிக்கு பெருமை ஏற்பட்டது. தற்போது உங்களின் ஊழலால் அவப்பெயர் ஏற்படுகிறது. மேயர், கமிஷனரால் மாநகராட்சியின் நற்பெயர் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.ஆளும்கட்சி கவுன்சிலர்கள் இப்படி மேயர், கமிஷனரை வறுத்தெடுத்து பேசியதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேஜைகளை தட்டி கோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.மேயர் ராமநாதன் கூறுகையில், ''அரங்கத்தால் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இதை வேண்டாம் என்கின்றனர். ஊழல் செய்திருந்தால் நீதிமன்றத்திற்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? காழ்ப்புணர்ச்சியில் பேசுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

baala
மார் 29, 2025 12:34

வருத்தப்படாமல் பதில் எழுதவும். இங்கு இலவசத்தை பற்றி பேசுபவர்களின் எத்தனை பேர் இந்த இலவசம் வேண்டாம் என்று புறக்கணித்தவர்கள்? எந்த இலவசமாக இருந்தாலும் சரி, பெண்களின் உதவி தொகை, இத போல மற்ற ஏதுவாக இருந்தாலும் சரி. வேண்டாம் என்று சொன்னவர்கள் பதில் எழுதலாம். கருத்தை கருத்தால் மற்றும் எதிர்கொள்ளவும்.


Ganesh
மார் 29, 2025 07:20

ஊழல் செய்தது தான் பிரச்சனையா? இல்லை கம்மியாக ஒரு கோடி ஊழல் தான் செய்ய முடிந்ததா என்று பிரச்சனையா?


Kasimani Baskaran
மார் 29, 2025 07:15

மேலிடத்தை காரணம் காட்டி மிரட்டி பணிய வைப்பது திராவிட சூழ்ச்சி...


VENKATASUBRAMANIAN
மார் 29, 2025 07:13

ஊழலின் உச்ச கட்டம். அவர்களது கட்சியினரே கொதிக்கும் நிலை. இதுதான் திராவிட மாடல்


Venkateswaran Rajaram
மார் 29, 2025 06:11

பிரச்சனை என்னவென்றால் இவர்களுடைய பங்குத்தொகை வரவில்லை... இந்த ஓட்டு போட்ட மக்களை என்னவென்று சொல்வது வாயில் வருகிறது.. பணத்திற்காகவும் இலவசத்திற்காகவும் ஓட்டு போட்ட இந்த கேவலமான மக்களினால் நம் வரிப்பணத்தை இவ்வாறு இந்த திராவிடக் கொள்ளையர்கள் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்


raja
மார் 29, 2025 06:11

ஊழல் என்பது திருட்டு ஒன்கொள் கோவாள் புற திராவிடர்களின் பிறப்புரிமை...


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 05:57

8 லட்சம் கோடி கடனில் இந்த ஒருகோடியும் அடக்கமா உடன்பிறப்பே ?


சமீபத்திய செய்தி