உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெட்கமின்றி பேசும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,

வெட்கமின்றி பேசும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,

சிறுநீரக திருட்டு விவகாரத்தில் மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., கதிரவன் வெட்கமின்றி பேசுகிறார். தன், திருச்சி மருத்துவமனையில் சட்ட விரோத சிறுநீரக அறுவை சிகிச்சை வாயிலாக கிடைக்கும் லாபத்தை, தன் தந்தையின் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரின், 14.50 கோடி ரூபாய் விலையுடன் ஒப்பிட்டு ஒரு வீடியோவில் பேசியுள்ளார். திருப்பத்துாரில் உள்ள அனைவரின் சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்றும் ஒப்புக் கொள்கிறார். இது, நகைச்சுவை அல்ல; நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன. மேலும், மருத்துவமனை வர்த்தகத்தில் குறைந்தது 7.50 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, அதே வீடியோவில் எம்.எல்.ஏ., கதிரவன் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையையும் அவர் மீது எடுக்கவில்லை. இந்த சீறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான திராவிட ஆனந்தன், தி.மு.க., அரசால் கைது செய்யப்பட்டாரா? - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !