உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலையத்துறை தவறை மூடி மறைக்கும் சேகர்பாபு: காடேஸ்வரா

அறநிலையத்துறை தவறை மூடி மறைக்கும் சேகர்பாபு: காடேஸ்வரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் கும்பாபிஷேகம் செய்வது உட்பட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல் அறநிலையத்துறை தோல்வியடைந்து விட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பாபுராஜன்பேட்டை, விஜயவரதராஜர் கோவிலை சீரமைக்க, 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும்கூட அதை செய்யவில்லை. இதைஅடுத்து, நீதிமன்றம், அறநிலையத்துறையை கண்டித்துள்ளது. உடனே சீரமைப்பு பணியை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குன்றக்குடி கோவில் யானை இறப்பு, பழனி கோவில் யானை இறப்பு, திருச்செந்துார் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து, அறநிலையத் துறையின் இயலாமை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான், அமைச்சர் சேகர்பாபுவுடன் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறையின் குளறுபடிகளை பொதுவெளியில் விமர்சித்துள்ளார்.ஆனால், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீது சிலர் திட்டமிட்டு பொய் பரப்புவதாகக் கூறுகிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க, அடுத்தவர் மீது குற்றங்களை சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 12:16

யாரு சார் இங்கே ஹிந்து மதத்தை இழிவு படுத்தி பேசியது? எழுதியது? இதையெல்லாம் படித்து விட்டு, யோசித்து சொல்லுங்கள். 1. திராவிடர்கள் இந்துக்கள். அவர்களை "திராவிடியா" என்று எழுதுவது யார்? 2. தெலுங்கர்களும் இந்துக்கள் தான். தெலுங்கு பெண்மணிகளை அவமானப்படுத்தி பேசியது யார்? 3. திமுக ஆதரவாளர்களிலும் இந்துக்கள் உண்டு. அவர்களை கொத்தடிமை, ஊ பி ஸ், 200 ரூவா என்று கொச்சைப் படுத்தரது யார்? 4. யாராவது, குடுமி, பட்டை, கொட்டை, சந்தனப் பொட்டு - என்று எழுதுகிறார்களா?? 5. நீங்களும் உங்க ஆட்களும் தான், மூர்க்ஸ், மிஷனரி என்றெல்லாம் எழுதுகிறீர்கள். பாஜக விற்கு எதிரா எழுதினால் உடனே பச்சை பிராமணனைக் கூட முஸ்லீம், கிறிஸ்தவன் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு மதவாத கருத்து போடறதும் நீங்களும் உங்க ஆட்களும் தான். யோசித்துக் கொள்ளுங்கள்.


Indian
நவ 27, 2024 12:46

ரொம்ப நியாயமா பேசுறீங்க, இப்படி பேசுனா அவங்களுக்கு பிடிக்காது


ஆரூர் ரங்
நவ 27, 2024 12:46

ஆ ராசா, கனிமொழி ராஜிவ் காந்தி பேச்சுகளை கேட்ட பின்னும் நாங்கள் ஹிந்துக்களை புண்படுத்தவில்லை என்பது காதில் பூக்கடை வைக்கும் வேலை. ஸ்டாலினுக்கு ஹிந்து மந்திரங்களை கேட்டாலே உடல் கூசுகிறதாம்.பைபிள் குர்ஆன் வசனங்களைக் கேட்டால் மட்டும் இனிக்கிறதா?


ஆரூர் ரங்
நவ 27, 2024 16:25

ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்ன்னு இழிவாக பேசியது யார்? ஆனா ஒண்ணுமே படிக்காத பாலைவன கைநாட்டு உருவாக்கிய மதத்தை உசத்தியா பேசுவீங்க.


ramesh
நவ 28, 2024 11:03

ஆரூர் ராங் உங்களை விட இழிவாக எங்களாலும் கேவலமாக எழுத முடியும் .ஆனால் எல்லாரும் பார்க்க கூடிய இடம் என்பதால் மரியாதையுடன் எழுதுகிறோம்.


ramesh
நவ 28, 2024 11:07

வைகுண்டேஸ்வரன் அருமை .இவை அனைத்தும் என் மனதிலும் எழுந்தவை தான் .


ramesh
நவ 28, 2024 11:09

இங்கே நடுநிலை இல்லை


pmsamy
நவ 27, 2024 12:05

பல வகையான வழிபாடுகள் இந்தியாவில் இருந்ததால் அதை வகைப்படுத்த முடியாமல், ஒன்றிணைத்து ஆங்கிலேயன், இந்து மதம் இன்று உருவாக்கினான். அடிப்படையில் இந்து மதம் உருவாக்கியது ஆங்கிலேயன், இந்தியர்கள் அல்ல.


Sampath Kumar
நவ 27, 2024 11:47

அய்யா யானைக்கு மதம் பிடித்து ஒருவனை கொன்றால் அதுக்கு கரணம் அறநிலைய உரையா ? அறநிலையத்துறையி ன்ன கொலை நிறை துறையா ? பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல தெரியாத நீ எல்லாம் சந்து முன்னைக்கு தான் தலைவர் போவியா


Barakat Ali
நவ 27, 2024 10:38

அமைச்சரவையிலேயே ஒற்றுமை இல்லை .....


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 10:08

மடத்தனமா இருக்கு.


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 09:59

சமூக வலைத்தளத்தில் வரும் ஆதரவுக் கருத்துகளுக்கு பணம் அனுப்பும் அறிவிலித்தனத்தை எந்த கட்சியும், திமுக உட்பட, செய்யாது. செய்யவும் முடியாது. எனவே, 200 ரூபாய், உ பி போன்ற முட்டாள்தனமான வரிகளை எழுத வேண்டாம் கடுப்பா இருக்கு.


ghee
நவ 27, 2024 11:07

உங்கள் அசகாய முட்டு சூரதனதை போடவேண்டாம்


Mettai* Tamil
நவ 27, 2024 11:27

தி மு க வுக்கு ஆதரவுக் கருத்து போடும் நீங்கள் , ஏன் ஹிந்து மதத்தை மட்டும் குறி வைத்து கேவலமாக விமர்சிப்பதை கண்டித்து கருத்து போட முடிவதில்லை ..தி மு க. உட்பட எல்லா கட்சியிலும் ஹிந்துக்கள் உள்ளார்கள் என்பது தெரியும்தானே ...தி க .வின் கொள்கையை பரப்பும் தி.மு. க. கட்சி என்பதாலா இல்லை 200 ரூபாய் யா இல்லை வேற்று மதத்தை சேர்ந்தவரா எது உங்களை தடுக்கிறது .. . உங்களுக்கு வரும் கடுப்பு தானே , மற்றவர்களுக்கும் வரும் .எத்தனை வருசமா ஹிந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவதை பொறுத்து கொள்ளமுடியும் ..


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 09:55

ஏதாச்சும் எழுதுங்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 09:53

சொந்த புத்தி உபயோகித்து ஏதாவது எழுதிப் பழகுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கும்பிட்டு விட்டு வாருங்கள்.


Bala
நவ 27, 2024 09:31

இந்த சேகர் அறநிலையத்துறைக்கு லாயக்கற்றவர்


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 08:04

சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 17 ஆண்டுகள் நடக்காத கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்து அனைவரும் அம்மன் அருள் பெற வேண்டும். இந்த அறிவிப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், இந்து முன்னணி காடேஸ்வரா, ஸ்டாலின் அரசை இந்து விரோத அரசு என்று சொல்லி தன்னை நகைப்புக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்.


Ganesun Iyer
நவ 27, 2024 08:25

அறிவாலயத்தில இடமுண்டு.. 200₹ க்கு இப்படி பாராட்டு புகழ்ச்சிக்காக....


hari
நவ 27, 2024 09:24

முரசொலி யில் போட வேண்டிய முட்டு இங்கே இருக்கு


Mettai* Tamil
நவ 27, 2024 10:17

சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்... அப்படியே ஆக்கிரமிப்பில் இருந்த 6500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டு விட்டோம் என்று சொன்னாரே அமைச்சர் . அந்த சொத்துக்களை 60 வருசமா யார் யார் வச்சிருந்தாங்கனு ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.. எல்லாம் நம்மாளுங்கதானே... அப்புறம் , எவ்வளவு பணம் அபராதமா வசூல் ஆச்சு ன்னு வெள்ளை அறிக்கை கொடுத்தா , இன்னும் சிறப்புங்க ...


ramesh
நவ 27, 2024 11:24

எதற்கு எடுத்தாலும் அறிவாலய 200 ரூபாய் என்று கருத்து போடுவது அவர்களின் கருத்து போட திறமை இல்லாமையை தான் வெளிக்காட்டுகிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை