உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வரி நிலுவைத்தொகை அபராதத்துடன் வசூலிப்பால் ஷாக்

சொத்து வரி நிலுவைத்தொகை அபராதத்துடன் வசூலிப்பால் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர் ; தமிழகத்தில் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், நிலுவைத்தொகை ஒரு சதவீதம் அபராதத்தோடு வசூலிக்கப்படுவது, பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 488 பேரூராட்சிகள் உள்ளன. இந்த ஆண்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு சொத்து வரி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பரில், பேரூராட்சிகளிலும் சொத்து வரி, ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது. முதல் அரையாண்டுக்கான தொகையை செப்டம்பர் மாதத்திற்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொகையை, மார்ச் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும். இல்லையெனில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதங்களில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை உயர்த்திய தொகை, ஒரு சதவீத அபராதத்துடன் வசூலிக்கப்படுகிறது. இதனால், பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தமிழகத்தில் வளர்ச்சி காணாத, பல பேரூராட்சிகள் உள்ளன. தொழில், வாழ்வாதாரத்திற்கு, அங்குள்ள மக்கள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் சொத்து வரி உயர்வுடன் அபராதம் விதிப்பது, மேலும் சுமையை தந்துள்ளது. எனவே, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Selvin Christopher
நவ 14, 2024 16:02

வரி கட்டாதற்கு அபராதம் தவறில்லை, நண்பர்கள் பலருக்கு இன்கம் டேக்Tax penalty ஸ் பற்றி தெரியவில்லையோ


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 13, 2024 13:44

வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் அனைவரும் மறக்காமல் 1000 ரூபாய் பணம் கால் கொலுசு புடவை மற்றும் குவாட்டர் பிரியாணி வாங்கிக்கொண்டு மறக்காமல் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்தால் தான் இது போன்று விலைவாசி உயர்வு கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.


Diraviam s
நவ 13, 2024 10:26

There is no gradual increase in taxes from previous govts every year or once in 2 years .. let it be any political party.. Due to planning commission pressure taxes are being increased now without any option .. Free schemes shall be reviewed and shall reach only the needy people. Compensation given to common people by Govt shall be reviewed like...those violating safety norms, illegal activities, drinking etc..


R.MURALIKRISHNAN
நவ 13, 2024 09:27

திராவிஷ மாடல்


Kalyanaraman
நவ 13, 2024 08:12

காசுக்கு ஓட்டை விற்றால் இதான் கதி.


GMM
நவ 13, 2024 07:22

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி க்கு மேல், மாநில நிர்வாகம் ஜிஸ்டி , பத்திர பதிவு, டாஸ்மாக் வருவாயில் 75 சதவீதம் ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகள் கல்வி, மருத்துவம் .. போன்ற செலவுகள் அதிகம் பிடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். பொது சுகாதாரம், தண்ணீர் வசதி, சுடுகாடு வசதிகள் செய்து கொடுத்து பராமரிக்க வேண்டும். பிரிட்டிஷ் கால பல நகராட்சிகள் இன்னும் நகராட்சியாக உள்ளது. சாதி, மத வாக்கு வாங்கி ஊர்கள் அதிகம் ஊக்குவிப்பு. சொத்து வரி கிரய பத்திர, பட்டா அடிப்படையில் இருக்க வேண்டும். மற்றவரிகள் நகராட்சி, குடியிருப்பவர் கூட்டு பெயரில் யிருக்க வேண்டும். அபராதம் விதிக்க முன்பு விதி இல்லை? ஜப்தி நோட்டீஸ் கொடுப்பர்.


Suresh Kesavan
நவ 13, 2024 06:54

ஆறு சதவீதமல்ல என்னக்கு ஐம்பது சவீதம் உயர்த்தி உள்ளனர்....இல்லாத குடிநீர் இணைப்புக்கும் வரி போட்டு உள்ளனர். பலமுறை புகார் கொடுத்ததும் பலனில்லை. திரும்ப திரும்ப வரி கட்டச்சொல்லி மெசேஜ் வருகிறது. இந்த ஆட்சி நாசமாய் போக...


Kasimani Baskaran
நவ 13, 2024 05:28

புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் புதிய அதிகாரிகளை நியமிக்கவேண்டும், கட்சிக்காரர்களை மேயர்களாக பணியமர்த்த வேண்டும். இதற்க்கெல்லாம் ஆகும் செலவை மோடியிடம் கேட்கமுடியாது - ஆதாலால் திராவிட வரி மூலமே சரிக்கட்டமுடியும்.


புதிய வீடியோ