உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்தவர் தலையுடன் சாமியாடி கோயில் விழாவில் அதிர்ச்சி

இறந்தவர் தலையுடன் சாமியாடி கோயில் விழாவில் அதிர்ச்சி

திருநெல்வேலி, ஜூன் 8---வீரவநல்லுார் அருகே கோயில் கொடை விழாவில் சுடுகாட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சுடலைமாடசாமி ஆடுபவர் கையோடு இறந்தவரின் தலையுடன் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே உப்பூரில், ஊர்க்காடு சுடலைமாடசாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு கொடை விழா நடந்தது. பின்னர் சாமக்கொடையில், சாமி ஆடுபவர் தாமிரபரணி கரையோரம் சுடுகாட்டிற்கு வேட்டைக்குச் சென்று திரும்பினார்.அப்போது சாமியாடியின் கையில் மனித தலை ஒன்றும், கை, கால்களும் தனித்தனியே இருந்தன. அவை சமீபத்தில் புதைக்கப்பட்டவரின் உடல்பாகமாக இருக்கலாம் எனத்தெரிகிறது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களில் வேட்டை செல்வோர் ஓரிரு எலும்பு துண்டுகளை மட்டும் எடுத்து வருவர். ஆனால் இவர் தலை உள்ளிட்டவற்றை தனித்தனியே எடுத்து வந்தது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை