உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிலதிபர்களிடம் ரூ.30 கோடி மோசடி கள்ளநோட்டு செல்வம் பற்றி திடுக் தகவல்

தொழிலதிபர்களிடம் ரூ.30 கோடி மோசடி கள்ளநோட்டு செல்வம் பற்றி திடுக் தகவல்

ராமநத்தம் : ராமநத்தம் அருகே கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான வி.சி., பிரமுகர் செல்வம், பல தொழிலதிபர்களை வலையில் விழ வைத்து, ரூ. 30 கோடி அளவில் மோசடி செய்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,39; முன்னாள் வி.சி., நிர்வாகி. இவர், மீதான வழக்கு தொடர்பாக, விசாரிக்க, கடந்த மார்ச் 30ம் தேதி, ராமநத்தம் போலீசார் அவரது நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அங்கு, 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. அதையடுத்து, அதர்நத்தம் கிராமம் அரவிந்த்,30; கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் சக்திவேல், 26; உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான முக்கிய குற்றவாளி செல்வம் மற்றும் அவரது கும்பலை, 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் கடந்த 1ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வம், அதர்நத்தம் வல்லரசு, 25; ஆவட்டி பிரபு, 32; பெரம்பலுார் மாவட்டம், பீல்வாடியைச் சேர்ந்த பெரியசாமி,29; ஆறுமுகம், 30; பெரம்பலுார் மாவட்டம், ஆடுதுறை சூர்யா, 25; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியான செல்வத்திடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், கடந்த 2021ம் ஆண்டில் இருந்து அதர்நத்தம் கிராமத்தில் அவர் தனது பண்ணை வீட்டில், ரகசிய அறை அமைத்து, அதில் ஜெராக்ஸ் மிஷின் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்துள்ளார்.சென்னை, பள்ளிக்கரணையில் தனது கட்டுமான நிறுவனத்திற்கு வாகனத்தில் கள்ள நோட்டுகளை எடுத்து செல்லும் போது, போலீசில் சிக்காமல் இருக்க தனது கும்பலுடன் போலீஸ் சீருடை, வாக்கி டாக்கி, ரைபிள் துப்பாக்கி பயன்படுத்தியதும், கள்ள நோட்டுகள் அடுக்கி வைத்த பெட்டிகளை வீடியோ எடுத்து, பல தொழிலதிபர்களுக்கு அனுப்பி, அவர்களிடம் ஆர்.பி.ஐ., தங்களிடம் பணம் அனுப்பியதாகவும், 1 லட்சம் ரூபாய் அனுப்பினால், 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.மேலும், தொழிலதிபர்களுக்கு கோயம்புத்துாரை சேர்ந்த கமலி இடைத்தரகராக இருந்து, 9 கோடி ரூபாயை செல்வத்திற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். பணம் கிடைக்காதவர்கள் தகராறில் ஈடுபடும்போது, அவர்களை வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று, குஷிப்படுத்தியுள்ளார். மேலும், இரிடியம் இருப்பதாகவும் கூறி பலரிடம் பணத்தை வாங்கி மோசடியும் இந்த கும்பல் செய்துள்ளது.மோசடி பணத்தில் ஊட்டி, கேரளா மாநிலத்தில் ரிசார்ட்டுகள், குவைத் நாட்டில் கன்சல்டன்சி கம்பெனியை குத்தகைக்கு நடத்திவந்துள்ளார். பல கோடி ரூபாய் வங்கி கணக்கில் உள்ளதாகவும், அதனை மீட்க குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டுமென பலரிடம் பணம் மோசடி செய்தார். முக்கியமாக, செல்வத்தின் கீழ் 17க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு பல மாநிலங்களில் தொழிலதிபர்கள், சாதாரண மக்களிடம் சுமார் 30 கோடி ரூபாய் அளவில் பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வம் உள்ளிட்ட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து, ஒரு கார், 3 லேப்டாப், 9 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் திட்டக்குடி உட்கோட்டத்திற்கு வந்த பின், வேப்பூர், ராமநத்தம், திட்டக்குடி பகுதியில் நடந்த 3 கொலை வழக்குகளின் குற்றவாளிகளை கைது செய்து பாராட்டு பெற்றார். தற்போது, கள்ள நோட்டு வழக்கில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் சுற்றி, கடந்த 1ம் தேதி முக்கிய குற்றவாளியான செல்வம் உட்பட 6 பேரை கைது செய்தார். அதை தொடர்ந்து, அவர் சக போலீசார் மற்றும் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karupanasamy
மே 04, 2025 14:27

கள்ளநோட்டு தலைவன் திருமாவளவன் ஏன் வாயை திறக்கமாட்டேன் என்கிறார்?


Kalyanaraman
மே 04, 2025 06:49

கஷ்டப்பட்டு போலீஸ் குற்றவாளிகளை கைது செய்தாலும் 90 நாட்களில் பெயிலில் வெளியே வந்து விடுவார்கள். பிறகு 20 30 வருடங்கள் முடிவற்ற நிலையில் கேஸ் போய்க் கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவருக்கு 10 பைசா கூட கிடைக்காது. இப்படி குற்றவாளிகளை உற்சாகப்படுத்தவும் மேலும் பல குற்றவாளிகளை உருவாக்கவே நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கிறது என்றால் மிகை இல்லை. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத துறை.


Rajan A
மே 04, 2025 06:44

வங்கிகளும், வருமான துறையும் நன்றாகவே செயல்படுகிறது.


Mani . V
மே 04, 2025 06:21

செல்வம் அவன் பெயர். அதற்கு முன் போட்டுள்ள அடைமொழி அவன் படித்து வாங்கிய பட்டமா? பிடிபடும் வரை கட்சி நிர்வாகி. பிடிபட்டுவிட்டால் முன்னாள் நிர்வாகி. கேடுகெட்ட காவல்துறை.


Rajan A
மே 04, 2025 06:45

இது தான் தி மாடல். புரியவில்லை என்றால் I Dont Care


முக்கிய வீடியோ