உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி

அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி

சென்னை: திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணத்தினால் நேர்ந்த ரணம் ஆறும் முன்னே அவ்வழக்கில் தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.ஆகவே, சில நாட்கள் முன்பு நான் எழுப்பிய 9 கேள்விகளைத் தொடர்ந்து, மேலும் 3 கேள்விகளை தமிழக பா.ஜ., சார்பாக முன்வைக்கிறேன்.1. அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அன்றையத் துணை முதல்வர் ஸ்டாலின் நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக-வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால் தான் தனிப்படை அமைத்து அஜித் குமாரை அடித்தும், துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா?2. அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை நேரில் கண்டு காணொளியாக படம்பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்?3. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன்?அஜித்குமாரின் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், வெறும் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டும் இழப்பீடு வழங்கிவிட்டும் அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராஜா
ஜூலை 03, 2025 17:17

அப்ப அப்போ நான் இருக்கேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார் அந்த கட்சி தலைவர்


Sudha
ஜூலை 03, 2025 16:17

இவர் போஸ் நன்றாக இருக்கிறது. சோபாவை விட்டு எழாத முதலாளி. பிஜேபி யை உட்கார்த்தி விடுவார் என்று டீ தெ ரிகிறது


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 03, 2025 16:12

சாத்தான்குளம் லாக்கப் மரணத்தின்போது எல் முருகன் அளித்த பேட்டி இப்போ ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கு ... அதை கொஞ்சம் இந்த நாலுகோடியை பார்க்கச்சொல்லுங்க ....


vivek
ஜூலை 03, 2025 16:02

இப்போ பாருங்க....ஓவியமா ஒருத்தன் கேனை கருத்து போடுவான்....அவனை முதலில் விசாரிக்கணும்.......வருவான் பாருங்க மக்களே


பேசும் தமிழன்
ஜூலை 03, 2025 18:35

அவருக்கு பதிலாக... வேறு இரண்டு பேர் வந்து இருக்கிறார்கள்.... அவருக்கு 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி இன்னும் வந்து சேரவில்லையாம் !!!


V Venkatachalam
ஜூலை 03, 2025 16:02

நயினார் ஐயா, நீங்க கேக்குறது சிரிய வியாபாரிக்கு எறும்பு கடிக்கிறது மாதிரி தான். இன்னிக்கு அவுரு துச்சாதனன் து மு வுடன் வரும் எலக்ஷனுக்கு தேர்தல் ஆணையத்துக்கு தெரியாம வோட்டுக்கு நோட்டு பட்டுவாடாவுக்கு போயிட்டாக. அதுனால உங்க கேள்விக்கு பதில் வராதுங்க. அதுக்காக நீங்க கேக்குற கேள்விகளை நிறுத்திப்புடாதீக..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை