உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டிலுக்கு பத்து ரூபா என பாடியபோது செருப்பு வீச்சு: நாகேந்திரன்

பாட்டிலுக்கு பத்து ரூபா என பாடியபோது செருப்பு வீச்சு: நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கரை ஆண்டுகளில், 631 கொலை, 18,200 பாலியல் வன்முறை நடந்துள்ளன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், போதைப்பொருள் கிடைக்கிறது. அதை தடுக்க, காவல்துறைக்கு துப்பில்லை. கரூர் பிரசார கூட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய், 'பாட்டிலுக்கு பத்து ரூபா' என, பாட்டு பாடும்போது செருப்பு வீசப்பட்டது. அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்.,; அவருக்கு பின் ஜெயலலிதா; அவருக்கு பின், சாதாரண தொண்டரான பழனிசாமி என முதல்வர் ஆனார்கள். ஆனால், தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் முதல்வராகிக்கொண்டு இருந்தால், மக்களுக்கு என்ன கிடைக்கும். தமிழகம் முழுதும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அவற்றை தீர்க்க, ஒரு குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளின் மன்னராட்சி தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், உண்மையான மக்களாட்சி தான் தேவை. - நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை