உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் கடையடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூரில் கடையடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த கடையடைப்பு போராட்டத்தால், 100 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.சொத்து வரி உயர்வு, கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.கடந்த 8ம் தேதி முதல் கடைகள் முன் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மட்டுமின்றி, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், முத்துார் என, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், கடையடைப்பு போராட்டம் நடந்தது.திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் துரைசாமி கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில், சொத்துவரி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியை காட்டிலும் வரி அதிகமாக உள்ளது. மத்திய அரசின், வாடகை கட்டடத்துக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த, கடையடைப்பு முழு வெற்றி பெற்றுள்ளது.ஒரு நாள் கடையடைப்பால், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு இன்று(19ம் தேதி) வரும் துணை முதல்வர் உதயநிதி, வணிகர் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிடில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Apposthalan samlin
டிச 19, 2024 13:26

gst யாருக்கு கீழ் வருகிறது மத்திய அரசா ? மாநில அரசா ?


Azar Mufeen
டிச 19, 2024 11:27

ரெண்டு கூட்டு களவாணி கட்சிகள், இவன் செலவு செய்து எம் எல் ஏ ஆகியவுடன், அவன் விலைக்கு வாங்கி தன் கட்சியில் சேர்த்துக்கொள்கிறான், டி எம் கே, பிஜேபி இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


Jay
டிச 19, 2024 11:22

மேடைகளில் ஜிஎஸ்டியை எதிர்த்து போராடுவது, ஜிஎஸ்டி என்றால் பாஜக கொண்டு வந்தது என்று மக்களை நம்ப வைத்தது. உண்மையில் கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான். பால் பொருள்களுக்கும், மின்சார கட்டணத்திற்கு, கடை வாடகைகளுக்கு என இந்தியாவில் முதன்முறையாக இதை அறிமுகப்படுத்துகிறார்கள்.


Anand
டிச 19, 2024 10:42

இப்போ போராடுவோம், தேர்தல் சமயம் குவார்ட்டர் பிரியாணிக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஓட்டுக்களை விற்போம்...


Loganathan Balakrishnan
டிச 19, 2024 10:20

பணம் 1000 கொடுக்க மற்றும் ஓசி பஸ் விடறதுக்கு காசு வேணுமில்ல


V RAMASWAMY
டிச 19, 2024 08:55

எம் எல் ஏ, எம் பிக்களுக்கு கொடுக்கப்படும் பலவிதமான சலுகைகளுக்கு ஜி எஸ் டி வசூலிக்கவேண்டும். ஒரு முறை எம் எல் ஏ, எம் பி, ஏன் கவுன்சிலர், பஞ்சாயத் உறுப்பினராக இருந்தாலும் கூட போதும், தலைமுறைகளுக்கு கவலையில்லை. இவையெல்லாம் சீர்சிருத்தப்படவேண்டும்.


SIVA
டிச 19, 2024 08:38

பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை போய் சேரும் என்பார்கள் நமது முன்னோர்கள் செய்த பாவம் உணர்ச்சி வசப்பட்டு காமராஜ் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட ஆட்சியை கொண்டு வந்தார்கள், இப்போது அதன் பலனை நாம் அனுபவிக்கின்றோம், ஒட்டு போடும் அன்று நாம் இன்று செய்யும் செயல் நம்மை பாதிப்பதை விட நம் பிள்ளைகளை அதிகம் பாதிக்கும் என்று நினைத்து மதம் ஜாதி மொழி இனம் என்று பார்க்காமல் நிதானமாக நியாமாக சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள் .... தவறான நபர்களின் கைகளில் அதிகாரம் இருந்தால் நாம் தான் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் நம் பிள்ளைகளும் தான் ....


jayvee
டிச 19, 2024 08:07

கடைவாடகைக்கு GST அதுவும் 18% என்பது கொள்ளை என்றால் சொத்துவரி, மின்கட்டணம், குடிநீர் கழிவுநீர் வரி உயர்வு என்பது பகல் கொள்ளை.. இருவருமே கொள்ளைக்காரர்கள்தான் .. GST குறைந்தபட்சம் நமது பிற விற்பனை வரி செலவில் கழித்துக் கொள்ளலாம் ..


Kalyanaraman
டிச 19, 2024 07:59

18% ஜி எஸ் டி யில் பாதிக்கு பாதி 9% மாநில அரசுக்கு செல்கிறது. மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இதை மத்திய அரசு அமலாக்கி இருக்க முடியாது. திருப்பூருக்கு வரும் துணை முதல்வர் ஒரு அட்டை கத்தியை சுழற்றி விட்டு மத்திய அரசை கண்டித்து சென்று விடுவார்.


Dharmavaan
டிச 19, 2024 07:53

திருடனுக்கு ஓட்டு போட்டால் துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும் .அல்ப இலவசங்களுக்கு ஆசைப்படும் பிச்சைகாரன்கள் நாட்டை நாசமாக்குகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை