மேலும் செய்திகள்
நகராட்சி சந்தை வசூலில் வாரம் ரூ.20,000 மோசடி!
10-Sep-2025
சென்னை:பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தி வரும் போலீசார், 'இங்கு குட்கா, பான் மசாலா, சிகரெட் விற்பனை செய்யப்படுவது இல்லை' என்ற, 'போர்டு' வைக்க உத்தரவிட்டுள்ளனர். மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில், பீடி, சிகரெட், குட்கா, பான் மசாலா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இத்தடையை மீறுவோர் மீது, போலீசார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர். இதற்காக, கல்வி நிலையங்கள் அருகே உள்ள கடைகளில் அடிக்கடி சோதனையும் நடத்தப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி, கல்லுாரிகள் என, கல்வி நிலையங்கள் அருகே உள்ள கடைகளில், போதை பொருட்கள் விற்போரை கைது செய்து வருகிறோம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில், அவர்களின் கடைகளுக்கும், 'சீல்' வைத்து வருகிறோம். இது, மற்ற கடைக்காரர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே யுள்ள கடைகளில், 'இங்கு குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு இல்லை' என்ற, விளம்பர பலகை வைக்கவும் என உத்தரவிட்டு வருகிறோம். மேலும், இக்கடைகளை கண்காணிக்க, காவல் நிலையம் தோறும் போலீசாரை நியமித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Sep-2025