உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் துவரம் பருப்பு தட்டுப்பாடு: தீபாவளிக்கு வினியோகம் சிரமம் தான்

ரேஷனில் துவரம் பருப்பு தட்டுப்பாடு: தீபாவளிக்கு வினியோகம் சிரமம் தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் மொத்தம் உள்ள, 2.21 கோடி ரேஷன் கார்டுகளில், 1.8 கோடி கார்டுதாரர்கள் துவரம் பருப்பு வாங்குகின்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ, 200 ரூபாய் வரை விற்கும் துவரம் பருப்பு, ரேஷனில் கிலோ, 30 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது.துவரம் பருப்பு வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 51,000 டன் துவரம் பருப்பு, மூன்று கட்டங்களாக கொள்முதல் செய்ய, தமிழக அரசு கடந்த மாதம் 16ம் தேதி ஆர்டர் கொடுத்துள்ளது. அதில், முதல் கட்டமாக, வரும் 16ம் தேதிக்குள் 20,000 டன் துவரம் பருப்பை வழங்க வேண்டும்.தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் நிறுவனத்துக்கு துவரம் பருப்பு சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை, விருதுநகரைச் சேர்ந்த சி.பி., புட்ஸ், வசுமதி டிரேடர்ஸ், மூர்த்தி டிரேடர்ஸ், சென்னை இன்டகரேட்டட் சர்வீஸ் பாய்ன்ட் பிரைவேட் லிமிடெட், மஹாராஷ்டிராவின் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய, ஐந்து நிறுவனங்கள் எடுத்துள்ளன.இவற்றில் விருதுநகர் வசுமதி டிரேடர்ஸ் மட்டும் ஒரு மாதத்தில், 1,200 டன்னும், மற்ற நான்கு நிறுவனங்கள் தலா, 4,700 டன் துவரம் பருப்பை, வரும் 16ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.ஏற்கனவே, துவரம் பருப்பு இரு மாதங்களுக்கு ஒருமுறை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால், துவரம் பருப்பின் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து, 20,000 டன் துவரம்பருப்பை வரும் 16ம் தேதிக்குள் சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தும், அவர்கள், கடந்த 10ம் தேதி வரை, வெறும் 3,473 மெட்ரிக் டன் மட்டுமே, அதாவது ஆர்டர் கொடுத்ததில், 17 சதவீதம் மட்டுமே சப்ளை செய்துள்ளனர்.இன்னும், 83 சதவீதமான, 16,527 டன் சப்ளை செய்ய வேண்டியுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் அது சாத்தியம் இல்லை என்பதால், ரேஷன் கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.இதுகுறித்து, உணவு பொருள் வினியோக துறை வட்டாரங்கள் கூறுகையில், 'துவரம் பருப்பு கொள்முதலுக்கு அரசு அனுமதி அளித்துவிட்டது. ஆர்டரும் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்தம் எடுத்த, ஐந்து நிறுவனங்களையும் விரட்டி, பருப்பு சப்ளை செய்யும் பணியை விரைவுபடுத்த, துறை அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம்' என்றன - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RVR
அக் 14, 2024 18:18

டாஸ்மாக் ல சரக்கு கிடைக்காதா ....


பாமரன்
அக் 14, 2024 13:30

அட... ரேஷன்ல மக்கள் துவரம்பருப்பு இவ்ளோ வாங்குறாங்களா.. இன்று ஒரு தகவலா இருக்கே...அலோ ஆபீஸர்ஸ் .. இத்தினி நாள் என் பேர்ல எந்த ஹோட்டலுக்குயா சப்ளை பண்ணுனீங்க..??


Lion Drsekar
அக் 14, 2024 13:08

பல மாதங்களாகவே துவரம் பேருக்கு கொடுப்பதையே நிறுத்திவிட்டார்கள் , இதுவரை யாரும் கேட்டதும் இல்லை, போராடியதும் இல்லை ரேஷன் கடை என்று ஒன்று இருந்தாலே போதும் , யாரும் எங்கும் எதுவுமே கேட்கமாட்டார்கள் ஆகவே எந்த ஒரு கவலையும் வேண்டாம், மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ கார்டே இல்லாதவர்களுக்கு எல்லா பொருட்களும் எவ்வளவ வேண்டுமானாலும் தாராளாமாகக் கிடைக்கிறது, வேறு எண்ணவேண்டும் இத்திருநாட்டில் கார்டு இருந்தால் இலவசம் இல்லையென்றால் மிகக்குறைந்த விலையில் ஏழைகளுக்காக ஊழியர்கள் சேவை செய்துகொண்டு வருகிறார்கள் பாராட்டுக்கள் . எல்லாவற்றிக்கும் சான்று இருக்கிறது . அப்படி இல்லை என்று ஒரே வரியில் பதில் கூறலாம் ஆனால் செயல்முறையில் காற்றாற்று வெள்ளம்போல் அள்ளிஅள்ளி கொடுக்கிறார்கள் , பாராட்டுக்கள் , வந்தே மாதரம்


sundarsvpr
அக் 14, 2024 09:03

ரேஷனில் வாங்குபவர்கள் எல்லோரும் வாங்கும் பொருள்களை உபயோகப்படுத்துவதாக கருத கூடாது. பெருபான்மையானவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்பதனை நாம் அறிவோம். விற்பனை ஆகாத பொருள்கள் தவறான முறையில் அதாவது கடத்தல் முறையில் விற்று அரசு நிர்வாகம் லாபம் சம்பாதிக்க கூடாது என்பதால். நிர்வாகம் என்றால் யார் யார் என்பதனை மக்களே யூகித்துக்கொள்ளுங்கள்


Tamil Inban
அக் 14, 2024 08:55

தீபாவளிக்கு துவரம்பருப்பு எதற்கு.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 14, 2024 10:11

நாங்களும் அப்படியே ரம்ஜானுக்கு ஆடு எதற்கு என எதிர்கேள்வி கேட்போம் . பதில் உண்டா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 08:42

பருப்பு வியாபாரிகள் பணம் கொடுத்தால்தான் பருப்பு என்று கறார் காட்டுகிறார்கள் ..... திவாலாகும் நிலையில் இருக்கும் ஒரு மாநிலம் பருப்பு வியாபாரிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும் ???? இன்னும் டாஸ்மாக் சரக்கடித்து மாநில அரசுக்கு உதவினால் அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாயைக்கொண்டு இல்லத்தலைவர் இறந்தாலும் உங்கள் குடும்பத்துக்காகவாது ரேஷனில் பருப்பு கொடுப்போம் .....


raja
அக் 14, 2024 07:55

அன்னைக்கு கட்டுமரம் லேவியை விளக்கி அண்டை மாநிலத்துக்கு அரிசியை கடத்தி விற்று கொள்ளை அடித்தது... இன்று அதன் வாரிசு பருப்பை பதுக்கி கொள்ளை அடிக்கிறது.... ஒன்கொள் கொள்ளையர்களிடம் விடியல் கேட்ட தமிழா நன்றாக அனுபவி...


Kasimani Baskaran
அக் 14, 2024 05:28

அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் ஒன்றும் ஆகவில்லை... நல்ல சிறப்பான காரணம்.


Prasanna Krishnan R
அக் 14, 2024 05:20

Useless minister of tamilnadu, focus on daily needs of a common man. Car race is not important. It's an order


Balasubramanian
அக் 14, 2024 05:16

ஏற்கனவே மாடல் அரசியல் தலைவர்கள் அந்த பருப்பு இங்கே வேகாது என்று சொல்லி வரும் நிலையில் இது எதிர் பார்க்க கூடியது தான்! இனி தமிழகத்தில் கலியாணம் கூட பருப்பு இல்லாமல் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை