உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்குவதா? தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்குவதா? தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அடுத்த கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம்படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9zbhurkr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24,310 தொடக்கப்பள்ளிகள், 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயர்நிலைப்பள்ளிகள், 3,110 மேல்நிலைப்பள்ளிகள் என 37,579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும்பள்ளிகள் 8,328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2,500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறதுஇவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

கண்ணன்
ஜன 02, 2025 11:57

பதினைந்தை இருபதாக உயர்த்தினால் எங்களது...இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மூடப்படும்


Bahurudeen Ali Ahamed
ஜன 02, 2025 10:32

இவர் சொல்வதுபோல் அமைச்சரின் நோக்கம் அரசுப்பள்ளிகளை தனியார்மயமாக்குவது என்றால் நிச்சயம் தடுக்கப்படவேண்டும், நம் மாநிலம் கல்வியிலும் சுகாதாரத்தில் மேம்பட்டிருப்பதற்கு காரணம் அரசுப்பள்ளிகளும் அரசாங்க மருத்துவமனைகளும்தான், நிச்சயம் அரசுப்பள்ளிகளில் சில குறைகள் இருக்கிறது அதை அரசாங்கம்தான் சரிசெய்யவேண்டும் தனியாரை கூட்டுசேர்க்கக்கூடாது


kulandai kannan
ஜன 02, 2025 09:33

தம்பி, இன்னும் பேட்டா வரலை.


Kasimani Baskaran
ஜன 01, 2025 21:52

வெரி சிம்பிள். திம்க்கா தனியார் பள்ளி என்ற சூழ்ச்சி மூலம் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க முயல்கிறது. தீம்க்கா விலை போயிடுச்சுடோய்... உடன்பிறப்புக்கள் குப்புற விழுந்து அழவேண்டிய தருணம்.


Karthikeyan Palanisamy
ஜன 01, 2025 21:13

பாஜக உள்ள வந்துரும்


Dharmavaan
ஜன 01, 2025 20:31

மத மாற்றும் பாவாடைகளுக்கு சாதகமான செயல்


தமிழ்வேள்
ஜன 01, 2025 20:22

திராவிட கும்பலின் இந்த மாதிரியான அரசுப்பள்ளி தனியார் மயத்தால் மத மாற்றம் தேச துரோகம் ஒழுக்கம் அற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் புத்தி இவைதான் அதிகரிக்கும்..... மதமாற்ற கும்பல்களின் இலக்கு அதுதான்.....


GMM
ஜன 01, 2025 20:03

அரசு பள்ளி, அரசு மருத்துவ மனை, போக்கு வரத்து, மின் வாரியம் மாநில நிர்வாகம் பிடியில் இருந்து விடுபட வேண்டும். இவை கூட்டுறவு, தொண்டு நிறுவனம் , தனியார் அல்லது joint venture. - கீழ் வர வேண்டும். படிக்கும் குழந்தை, பெற்றோர் உறவினர் மதம் மாறினால், பள்ளிக்கு சீல். அல்லது 20-60 வரை அரசுக்கு ஆரோக்கிய மக்கள் குறைந்த பட்ச வரி செலுத்த வேண்டும்.


Bye Pass
ஜன 01, 2025 22:21

தனக்கு தெரிந்த டாஸ்மாக் துறையில் மட்டுமே அரசாங்கம் கவனம் செலுத்தலாம்


Ramesh Sargam
ஜன 01, 2025 19:49

அந்த தனியார் யார்? San Academy போன்று முதல்வரின் சொந்தங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளா? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளா? இப்ப புரிஞ்சி போச்சு. மீண்டும் ஒரு ஊழல்.


Haja Kuthubdeen
ஜன 01, 2025 19:11

என்ன சத்தம் வேகமா கேட்குது.....!!


முக்கிய வீடியோ