உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா? அண்ணாமலை கேள்வி

மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகளை கற்பிக்கக் கூடாதா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hnh4z1ny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதல்வர்?தற்போது 2025ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

S.jayaram
மார் 14, 2025 11:48

நீங்கள் செய்வது காலாவதியான ஹிந்தியை திணிக்க இந்த ப்பாடு படுகிரீர்களே ஏன். அவர்கள் முமொழிதிட்டம் அமுல் படுத்தினால் தனியார் நிறுவனங்களில் சேர்க்கை குறைந்துவிடும் அதுதான் முதல் காரணம், அடுத்து 2026 தேர்தல் அதில் எதிர்கட்சிகள் ஹிந்தியை திமுக கொண்டுவந்து விட்டது என்று பிரச்சாரம் செய்வார்கள் அதனால் தோல்வி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இப்போ வேறொன்றும் வேண்டாம் இன்னும் இரண்டாண்டு கழித்து அமுல் படுத்தலாம் என்று கூறுங்கள் உடனே ஒத்துக்கொள்வார்கள் ஏனென்றால் தேர்தல் முடிந்து விடும் அல்லவா? ஆம் இதெல்லாம் எதற்கு இவர்கள் இருவரும் செய்கிறார்கள் ஆனால் டாஸ்மாக் ரைட் வெளியே தெரியாமல் மறைக்கவா?


Matt P
பிப் 18, 2025 22:30

முன்றாவது ஏதாவது என்றால் தமிழ் நாட்டில் தெலுங்கு முக்கிய மொழி ஆகலாம். சட்டசபையிலும் தெலுங்கு எதிரொலிக்கலாம். தமிழ்நாட்டில் இரண்டாவது முக்கிய மொழி தெலுங்கு என்று தான் தெரிகிறது. நாம் தமிழர் கட்சிக்கு எதிராக நாம் தெலுங்கர் கட்சியும் உருவாக்கலாம். எப்போதும் யாரையும் புண்படுத்தும் எண்ணத்திலும் கருத்துக்கள் உருவாவதில்லை. எல்லாம் ஒரு சிந்தனைக்கு தான்.


Gopinath Raman
பிப் 18, 2025 18:51

நான் திரு. அண்ணாமலை அவர்கள்களை ஆதரிக்கிறேன். முட்டாள்தனமான திராவிட இனத்திற்கு எதிராக அவர் சரியான கேள்வியைக் கேட்கிறார். அரசுப் பள்ளிகள் ஏன் இந்தி உட்பட எந்த மூன்றாம் மொழியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது எதிர்காலத்தில் நம் குழந்தைகளுக்கு நல்லது.


Matt P
பிப் 18, 2025 09:33

கல்வி அமைச்சரே மும்மொழியை ஆதரிக்கிறார். அன்பில் போயாமொழி மகேஷின் மகனே இங்கிலீஷ் பிரெஞ்சு இந்தி மும்மொழி யை ஆதரிக்கிறார். தமிழுக்கு தான் வேட்டு.


Jegaveeran
பிப் 17, 2025 23:21

அண்ணாமலை சார் நீங்கதான் 2026&ல் ஆட்சிக்கு வரப்போகிறீர்களே. அப்போது 3 மொழி என்ன ஏழை மாணவர்களுக்கு 7 மொழி கூட படிக்க ஏற்பாடு செய்யுங்க.


Ramesh Sargam
பிப் 17, 2025 20:50

ஒருவர் மூன்று பெண்டாட்டி வைத்துக்கொள்ளக்கூடாதா என்று திருட்டு திமுகவினர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்பார்கள்.


Kannan
பிப் 17, 2025 17:57

அந்த மூன்றாவது மொழி இந்தியை தவிர்த்து வேறு வாய்ப்பு என்பதே இல்லை. நான் எல்லையோர மாவட்டம் இல்லை. ஆனால், நான் பெங்காலி, மராத்தி, பஞ்சாபி அல்லது ஏதோ ஒரு தென் இந்திய மொழி படிக்க வேண்டும் எனில் எத்தனை பள்ளியில் அதற்கான வாய்ப்பை தருவர்??? ஏதோ ஒரு வகையில் மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்திய உள்வரும்... இந்தியாவில் இரு மொழி குடும்பமே.. ௧. தமிழ் ௨. சமஸ்கிருதம் நாங்கள் மற்ற மொழிகளை கற்க சமஸ்கிருதம் கற்கிறோம். வடவர் தென் இந்திய மொழிகளை கற்க மூல தமிழ் கற்பரா?


Matt P
பிப் 18, 2025 09:39

அவர்கள் நன்றாக தமிழ் கற்று கொண்டு தமிழர்கள் தான் என்று சொல்லி கொண்டு தமிழர்கள் பணிகளை பற்றி கொள்வர். அப்போது ஏற்று கொள்வீர்களா? இப்போதே வட இந்தியர்கள் நிரம்பி கொண்டனர் என்று வசை பாடுகின்றனர். நமக்கு தேவையானால் கற்று கொள்வோம். இல்லையேல் இருப்பதை வைத்து பிழைக்க முடியுமானால் பிழைத்து கொள்வோம்.


பேசும் தமிழன்
பிப் 17, 2025 09:07

இவர்களின் குழந்தைகள் மட்டும் ஹிந்தி படிக்கலாம்.... இவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி பாடம் சொல்லி கொடுப்பார்கள்..... ஆனால் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் ஹிந்தி சொல்லி கொடுக்க கூடாது..... அதே அவர்கள் காசு கொடுத்து தனியார் பள்ளிகளில் படித்தால் நடக்கும்.... என்ன உங்க நியாயம் ???


Palanisamy T
பிப் 17, 2025 06:59

அண்ணாமலையாரின் இந்தக் கேள்வியில் சந்தேகமின்றி அரசியல் உள்நோக்கமுள்ளது அவரின் இந்த கேள்வியில் மறைமுகமாக மூன்றாவது மொழியாக இருப்பது கட்டாய இந்தி மொழி? இந்தியை தமிழ்மொழியோடு என்றும் ஒப்பிடமுடியாது. இந்த தமிழின் அருமை, தமிழ் முதல் மெய்யறிவு மொழி என்று அறிவதற்கு அண்ணாமலையார் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. முன்பு கூறியதுப் போல் அண்ணாமலை அவர்களும் தமிழக கவர்னரும் டில்லியிலிருந்து தமிழகத்திற்க்கு இணைந்து செயல்பட அனுப்பப்பட்ட அரசியல் தூதர்கள். இது அரசியல் ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் திமுக அரசை ஆட்சியிலிருந்து இறக்கிவிட வேண்டும். அதுதான் அவர்களது வெளியில் சொல்லப் படாத லட்சியம். இந்திய துணைக் கண்ட பகுதியில் தமிழகம் கேரளா முக்கிய கேந்திர பகுதிகளாகும். தமிழகம் டில்லி ஆட்சியில் வீழ்ந்தால்தான் மத்திய ஆட்சியாளர்களுக்கு மரியாதை. மேலும் தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் நல்ல ஆட்சிகள் கொடுக்கின்றார்கள் என்று சொல்வதற்கில்லை. திமுக கட்சி கருணாநிதி குடும்ப ஆட்சியில் இருக்கின்றவரை திமுக சிறந்த கட்சியாக வருவதற்கு வாய்ப்பில்லை. திராவிடக் கட்சியில் படித்த நல்ல தலைவர்களை தேடவேண்டியுள்ளது. திராவிடக் கட்சியில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். மக்கள்தான் இந்த மாற்றங்களை கொண்டுவரமுடியும்.


Gopinath Anandakrishnan
பிப் 17, 2025 13:15

NEP இல் மூன்றாவது ஒரு மொழி என்பதை ஏன் அரசியல் என்று கூறுகிறீர்கள்? நம்ம பாட்டன் முப்பாட்டன் தேசாந்திரம் கடல் கடந்து மட்டுமல்ல சென்று வியாபாரம் செய்து பொருள் ஈட்டிவருவர். அவர்கள் பழமொழி பேசும் திறம் பெற்று இருப்பர். இது 60 களில் மொழிவாரி மாநிலங்கள் உருவான பின்பும் தொடர்ந்தது. ஆனால் 67 க்கு பிறகு, நம்மை சனியன் பிடித்துக்கொண்டது. கன்னட ஈவேரா ஓங்கோல் கருணாநிதியால் தமிழர்கள் தமிழ்நாட்டை தாண்ட முடியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் தெரியாது. ஆனால் சினிமா கம்பெனி தீயமுக திராவிடியா பேசி தமில் தமில் என்று முழங்கி அவர்கள் கம்பெனி எடுக்கும் படங்களுக்கு பிறமொழி குறிப்பாக பாம்பேயில் இருந்து இறக்குமதி செய்த நடிகைகள் தான் வேண்டும் என்று உதை அண்ணாவே ஆடம் பிடிக்கிறார். அதுபோதாதென்று அவர்கள் குடும்ப டிவிக்களில் சீரியல்களில் வரும் அனைவரும் மலையாளம், கன்னடம், தெலுகு பார்ட்டிகள். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு... இதில் அண்ணாமலை சொல்லியதை போல் அவர்கள் கல்விக் குழுமங்களில் ஹிந்தி ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் ஹிந்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளை படிக்க கூடாது. என்னே இந்த ஓங்கோல் கும்பலின் அட்டகாசம்


அப்பாவி
பிப் 17, 2025 05:30

சமீபத்தில் மும்பையில் செட்டில் ஆன தூரத்து சொந்தங்களை சந்தித்தேன். பெரியவர்களே தமிழை மறந்துட்டு எல்லாத்தையும் இந்தில பேசி கழுத்தறுப்பு. அவிங்களிட குழந்தைகள் தமிழ் வாடையே இல்லாம வளர்ப்பு. எல்லாத்துக்கும் இந்தி கேக்கறதுக்கே எரிச்சல். குழந்தைகளை இந்தில எழுப்பி, இந்தில கொஞ்சி, இந்தில ஊட்டி உட்டு இந்தில திட்டி, புருசன் பொண்டாட்டி ஏதோ நமக்கு புரியாதுன்னு இந்திலயே நம்னளப்.அத்தி கமெண்ட் அடிச்சு ஏதோ தேவபாஷை பேசற மாதிரி நினைப்பு. எதுக்கு தமிழ்நாட்டுக்கு வர்ராங்கன்னு தெரியலை.


Gopinath Anandakrishnan
பிப் 17, 2025 13:21

கோவிச்சுக்காதீங்க உங்க தூரத்து சொந்தத்தை இனி பாக்காதீங்க பேசாதீங்க. தமிழ் நாட்டிலேயே நல்லா தமிழ் பேசக்கூடிய ஹிந்தி காரங்க குறிப்பா ஹோட்டல் பேக்கரி, டீக்கடை, பானிபூரி , ஸ்வீட் ஸ்டால் போன்ற இடங்களில் அழகு தமிழில் பேசி ஆச்சரிய படுத்துகிறார்கள். நீங்கள், பார்டர் தாண்டினால் தெலுங்கு தள்ளுது, கன்னடா கொத்தில்லா, மலையாளம் தெரியாது. கொஞ்சம் ஆறுதலா திரைப்படமோ டிவி சீரியலோ பார்க்கலாமுன்னா வர எல்லாரும் பிரமாநிலத்த சேர்ந்த நடிகர் நடிகையர்கள். முக்கால் வாசி ஓங்கோல் ஆசியுடன் வரும் தெலுங்கர், மலையாளி கூட்டம். நல்ல சந்தோசப்பட்டிக்கோங்க "இனி தமிழ் தமிழனோடு மட்டும் மெல்ல சாகும்" மற்றவர்கள் அதை பேசி வாழவைப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை