உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி

முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'மற்ற மதங்களை பற்றி பேச முடியாதவர்கள், ஹிந்து மதத்தை பற்றி மட்டும் ஏன் இப்படி இழிவாக பேசுகிறார்கள்? முருகனைப் பற்றி இழிவாக பேசினால் நெஞ்சம் பதற வேண்டாமா?' என்று மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது; என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் மற்றும் கடைசி அறுபடை வீடுகளும் மதுரையில் தான் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8pgo1kll&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

புண்ணியம்

மதுரை என்பது மீனாட்சியம்மன் பட்டினம். மீனாட்சியம்மன் தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில் தான் உள்ளார். முருகனின் தந்தை சிவபெருமான், முதல் சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார். எனவே, இந்த மதுரையில் தாய், தந்தை, மகன் இருக்கின்றனர். அப்படியென்றால், மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அந்தப் புண்ணியத்தினால் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவதரித்தார். இவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் சிலைக்கு அருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவர் உருவத்தில் முருகன் வாழ்ந்தார். மதுரையில் நடந்த நிகழ்வில் ஒன்றை சொல்லப்போகிறேன். இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று அருள், குங்குமம், பிரசாத்தை பெறுகிறோம். ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி கொடுக்கும் மீனாட்சி கோவிலில் ஒளி இல்லை. குங்குமம் கொடுக்க ஆள் இல்லை. கோவில் நொறுங்கி போனது.

தெய்விக பூமி

ஏன் தெரியுமா? 14ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மதுரையை மாலிக்காபூர் கொள்ளையடித்தான். அதன்பிறகு, 60 ஆண்டுகள் மீனாட்சியம்மன் கோவிலில் விளக்கு இல்லை. மூடப்பட்டிருந்தது. அது இருண்ட காலம். 14ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார் விஜயநகர இளவரசர் குமார கம்பணன்.இதில் இருந்து என்ன தெரிந்தது. நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை. யாராலும் அழிக்க முடியாது. நமது கலாசாரம் ரொம்ப ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இன்றும் ஆழமாக இருக்கிறது. இனியும் இருக்கும். இதுதான் இந்த தெய்விக பூமியின் பலம்

ஆபத்தானது

முருகனின் வடிவதத்தில் நமது அறம் தொடர்ந்து தளைக்கிறது. உலகை தீமை சூளும் போது அதை அறுப்பது அறம். எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம். அதன்பெயரே புரட்சி. உலகின் முதல் புரட்சி தலைவர் முருகப்பெருமான். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர். முருகன் மாநாட்டை ஏன் தமிழகத்தில் நடத்துகிறீர்கள்? உ.பி., அல்லது குஜராத்தில் நடத்தலாமே? என்று ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். இதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதுபோல் கேட்பார்கள். இன்று முருகனை பார்த்து கேட்கிறார்கள். நாளை சிவபெருமான், அம்மனை பார்த்து கேட்பார்கள். இந்த சிந்தனை மிகமிக ஆபத்தானது.

போலி மதச்சார்பின்மை

நான் 14வது வயதில் சபரிமலைக்கு போனவன். தைப்பூசத்திற்கு திருத்தணிக்கு சென்றவன். நான் சென்னை மயிலாப்பூரில் படித்தபோது, நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு சென்றவன். சிறிது காலத்தில் எனக்கு மாற்றம் கிடைத்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். என்னுடைய 14 வயதிலேயே இதுபோன்ற கேள்விகளை சந்தித்தேன். எல்லோருக்கும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து இருப்பீர்கள். ஏனெனில் ஹிந்துக்கள் மதச்சார்பில்லாதவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு ஹிந்து ஒரு ஹிந்துவாகவே இருந்தால் இவர்களுக்கு பிரச்னை. ஒருவன் ஹிந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி. இதுதான் போலி மதச்சார்பின்மை.

துணிச்சல் உண்டா?

என் மத நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதை கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்களைப் பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? அதனால் சொல்கிறேன். சீண்டிப் பார்க்காதீர்கள். சாதுமிரண்டால் காடு கொள்ளாது. முருகன் தமிழ்க்கடவுள். ஆனால், அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். வடஇந்தியாவில் கார்த்திகேயராகவும், ஆந்திரா, கர்நாடகாவில் சுப்ரமணியராகவும், தமிழகத்தில் முருகராகவும் இருக்கிறார். உலகம் முழுவதும் முருகன் பரந்திருந்தாலும், தமிழகத்தில் தான் அவர் பாதம் ஊன்றியுள்ளது. எனவே, தான் முருக பக்தர்களின் மாநாடு மதுரையில் நடக்கிறது. இங்கு சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ண பகவான், காளி மாதா கருப்பு. நாம் நிறத்தின் வழியாக பார்ப்பதில்லை. அகத்தின் வழியாக பார்க்கிறோம். இங்கு கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனை சீண்டி பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கின்றனர். அவர்களுக்கு கிண்டல் செய்யும் உரிமை உண்டு. இதனை கேட்டால், இதுதான் மதசார்பின்மை என்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்? அறத்தை அசைத்து பார்க்க அவர்கள் யார்? அவர்களால் மற்ற மதங்களை பற்றி பேச முடியுமா? நம் மதத்தை பற்றி மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்.

பதற வேண்டாமா?

60 ஆண்டுகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மூடிக்கிடந்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தோம். அந்த துணிச்சலால் பேசுகிறார்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல. இங்குள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம்ம கடவுளை திட்டும் கூட்டம், காணாத கூட்டமாகிவிடும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணை திறந்த பூமி இது. முருகனை பற்றி இழிவாக சொன்னால், உங்களின் இதயம் நொறுங்க வேண்டாமா? துடிக்க வேண்டாமா? பதற வேண்டாமா? நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லையா; கைமாறு செய்ய வேண்டாமா? நன்றியை காட்ட வேண்டாமா?எப்படி மின்னல் கண்களை குருடாக்குமோ, எப்படி காட்டாற்று வெள்ளம் கரைகளை உடைக்குமோ, அதுபோல பொங்குவோம். அநீதியை தட்டிக் கேட்க திரளுவோம். அறத்தை காக்க அனைவரும் எழுவோம். முருகன் நீதியை காப்பாற்ற புறப்படுவோம். முருகப் படையை திட்டும் கூட்டத்தை தகர்ப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!இந்திய அரசியலமைப்பு சட்டம் நமது அறத்தை காக்கிறது. அரசியலமைப்பு சட்டம் இல்லாத காலத்தில் மாலிக்காபூர் வெறியாட்டம் போட்டான். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் இருக்கும் போதே, ஒரு கூட்டம் ஆடுகிறது. காரணம், நாச சக்திகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல் விட்டது தான், இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 12:41

பவன் கல்யாண் ..அற்புதமான பேச்சு ...வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் ...


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2025 10:34

திமுகவில் உள்ள இந்துக்களுக்கு மானம் ஈனம் வெக்கம் சூடு சொரணையற்றவங்களாக இருப்பவர்கள் என்று தெளிவாக சொன்னார். 200 ரூபாய் ஊபிஸ் புரிந்து கொள்ள வேண்டும்


அப்பாவி
ஜூன் 23, 2025 09:49

இத்தனைக்கும் ஒரு முருகன் கோவில் கூட ஆந்திரா தெலங்கானாவில் கிடையாது. இவுரு இங்கே வந்து தான் பெரிய முருக பக்தன்னு அடிச்சு உடறாரு. கூத்தாடிதானே..


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 12:43

விஜயவாடா, குப்பம், மோபிதேவி, குடிவங்கா போன்ற பல ஊர்களில் முருகன் ஆலயங்கள் உள்ளன. கார்த்திக், சுப்பிரமணிய போன்ற பெயர்களை வைத்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த பலரை நானறிவேன். எஸ்பி பாலசுப்ரமணியம் ஆந்திராகாரர்தானே?.


மூர்க்கன்
ஜூன் 23, 2025 13:47

ஏன் இல்லை திருப்தி மலை கூட குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் முருகனுக்குத்தான் சொந்தம் அந்தவகையில். ஆனால் பழைய தமிழ் கல்வெட்டுகள் திட்டமிட்டு அழிக்க பட்டு விட்டன. இந்த உண்மை தெரிந்ததால்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமலையை பெருமாளாக ஏற்க மறுத்து பாட மறுத்து விட்டார். ஏன் அது கவுதம புத்தரின் சிலையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.


Oviya Vijay
ஜூன் 23, 2025 09:38

யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை அப்படியே பார்த்து படித்த அவரின் பேச்சுக்கு இங்கே சங்கிகள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று வானளாவ புகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.. அவரது பேச்சை இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும்... தானாக எழுதியதைப் பேசினாரா... இல்லை யாரோ எழுதித் தந்ததை பார்த்துப் பேசினாரா என்று உங்களால் உணர முடியும்... எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... அது தான் சங்கிகளுக்கு இல்லையே...


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2025 10:31

துண்டுசீட்டு பார்த்து பேசுவதில் நெம்பர் ஒன் திமுக முதல்வர் மட்டுமே.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 12:44

""யானை வரும் முன்னே ..மணியோசை வரும் பின்னே...பூனைமேல் மதில் ...பூனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகம் உருண்டோடும்"" .. இதை போல் உளறாமல் பவன் கல்யாண் 1000 மடங்கு சிறப்பாக பேசியிருக்கிறார் ,,,


கல்யாணராமன் மறைமலை நகர்
ஜூன் 23, 2025 06:13

வேணு, பவன் கல்யாணை சொல்வது போல் நைசா கருணாநிதி குடும்பத்தை சொல்லிட்டியேப்பா. பார்த்து, பேட்டாவை நிறுத்திடப் போறாங்க.


ramani
ஜூன் 23, 2025 05:56

பவன் கல்யாண் பேச்சு அருமையிலும் அருமை. சூப்பர்


M Ramachandran
ஜூன் 22, 2025 23:42

போராளி மத சார்பின்னைய்ய பற்றி பேசும் உன்மத்தர்களை எந்த கட்சியிலிருந்தாலும் இந்துக்கள் ஆகிய நீங்கள் ஒற்றுமையாக வரும் சட்ட சபை தேர்தலில் புறம் தள்ளுவீர்களா? இது படிப்பினையாக இருக்கட்டும். ஒரு கும்பல் நீட் தேர்வை ஒழி ப்போம் என்று சட்ட நுணுக்கம் தெரியாது பீத்தி கொண்டு வந்த ஒரு ...விடியா மூஞ்சி ..... மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரியும் எழவு வீட்டுக்கு போனவன் மாதிரியம் மூஞ்சியை மூடிக்கொண்டு ஒளிந்து கொண்டிருகிறார். கொசுவை ஒழிப்பது போல் ஒழிப்பேன் என்று கூறியவர் அப்பன் இப்போ டில்லிக்கு காவடி தூக்கி கொண்டிருக்கிறார்


Kumaravelan
ஜூன் 22, 2025 23:40

super speech


ராஜ்
ஜூன் 22, 2025 23:14

வெக்கம் கெட்டவங்க காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க அவங்களுக்கு ஏது மானம் ரோசம்


சுலைமான்
ஜூன் 22, 2025 22:59

பவன் கல்யாண் போன்ற துணிச்சலான அரசியல் வாதிகள் தமிழகத்தில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை