சிலவரி செய்திகள்
தமிழகத்தில், 502 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் சேருகின்றனர். படிப்பு முடிந்தும், 'அரியர்' வைத்த மாணவர்களுக்கு, அதில் தேர்ச்சி பெற அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள், சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் போது மட்டுமே, தேர்வு எழுத முடியும். 2022க்குப் பின் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த, 14ம் தேதி, உயர்கல்வித்துறை அரசு செயலர் சமயமூர்த்தி வெளியிட்ட அரசாணையில், 'பட்டயப் படிப்பை முடித்தும், அரியர் வைத்துள்ள மாணவர்கள், சிறப்பு வாய்ப்புக்கான பதிவு கட்டணம், 750 ரூபாய், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், 40 ரூபாய், விண்ணப்பக் கட்டணம், 30 ரூபாய், ஒரு பாடத்தேர்வு கட்டணம், 65 ரூபாய் செலுத்தி, ஏப்ரல், அக்டோபர் பருவத் தேர்வுகளில் பங்கேற்கலாம்' என, தெரிவித்துள்ளார்.