உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14 மருத்துவ கல்லுாரிகளின் டீன்கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

14 மருத்துவ கல்லுாரிகளின் டீன்கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், 14 அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு நியமிக்கப்பட்ட, 'டீன்'கள் எனப்படும், முதல்வர்கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வராக பதவி உயர்வு பெறுவோருக்கான பட்டியலை புதிதாக தயாரித்து, நான்கு வாரங்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளின் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் என, 26 பேராசிரியர்களின் பதவி உயர்வு பட்டியலை அரசு தயாரித்தது. இது சம்பந்தமாக ஆட்சேபனைகளையும் கோரியது. ஆனால், ஆட்சேபனைகள் தெரிவிக்கும் முன்னரே பேராசிரியர்கள் 14 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, முதல்வர்களாக நியமித்து, 2024 அக்., 3ம் தேதி அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, பேராசிரியர் மனோன்மணி, ஜெயலால் உட்பட நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 14 அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்தும், பணிமூப்பு அடிப்படையில் மனுதாரர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து, நான்கு வாரங்களில் புதியவர்களை நியமிக்கவும், கடந்த பிப்., 26ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, டாக்டர் அமுதாராணி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டாக்டர்கள் ஜெயலால், கலைவாணி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் 14 பேரின் நியமனத்தை, தனி நீதிபதி ரத்து செய்தது சரியே. முதல்வராக பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிக்க, இரண்டு மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், அரசு இரண்டு நாட்களில் நியமன உத்தரவு பிறப்பித்துள்ளதை ஏற்க முடியாது.தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நான்கு வாரங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளின் முதல்வராக, பதவி உயர்வு பெறுவோருக்கான பட்டியலை தயாரித்து, தமிழக அரசு நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Gajageswari
ஜூலை 07, 2025 05:25

மேல்முறையீடு செய்தவர்கள் தலா ₹1 லட்சம் அபராதம் விதித்து இருக்கவேண்டும்


ems
ஜூலை 06, 2025 20:58

இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தோன்றுகிறது. மொத்தம் 26 பேராசிரியர்கள் பட்டியல்... இரண்டு மாதம் அவகாசம்... இரண்டு நாளில் பணி நியமனம்... முறைகேடு எப்படி தொடங்குகிறது என்று நன்றாக சிந்திக்க வேண்டும்... அது எவ்வாறு சட்டம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய வேண்டும்... திமுக அனைத்து பேராசிரியர்களையும் 26 தனித்தனியே தொடர்பு கொண்டு அதிகம் பயனுள்ளவர்களை 12 கண்டறிந்து, அவர்களை விட்டு விட்டு... மற்ற 14 குறைந்த பயனுள்ளவர்களை இரண்டே நாட்களில் நியமித்து இருக்கலாம்... மேலும் இருவரை கொண்டு வழக்கு தொடர்வது போல் காண்பித்து... நீதி மன்ற தீர்ப்பு வழியாக அதிக பயனுள்ளவர்களை நிரந்தரமாக பதவியில் அமர்த்த முடிவு செய்திருக்கலாம்..... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்....


Chitrarasan subramani
ஜூலை 06, 2025 20:31

ஆருர்ராங் ஆஜரகவில்லையே என நினைத்தேன்,ஆனால் தாமதமாக ஆஜர் ஆகி வழக்கமான கருத்தை பதிவிட்டு உள்ளார்.


Ravi Kulasekaran
ஜூலை 06, 2025 17:49

2026–க்கு முன்பே எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு வரையும் வாரி எடுக்க வேண்டாமா


M S RAGHUNATHAN
ஜூலை 06, 2025 13:00

திராவிட மாடல் ஆட்சியில் குறையா? எந்த கொம்பன் சொன்னது?


GMM
ஜூலை 06, 2025 12:41

ஆட்சேபனைகள் தெரிவிக்க, இரண்டு மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், அரசு இரண்டு நாட்களில் நியமனம். ரத்து செய்ய வேண்டும். பணம் கைமாறி இருக்கும்.? இனி நியமன பணிகளை மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். கவுன்சில் தமிழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் இனி சட்ட விதிகளை மீற அஞ்சுவர்.


rasaa
ஜூலை 06, 2025 12:23

எத்தனை கட்டிகள் கைமாறியதோ? பணம் கொடுத்து பதவி வாங்கியவர்கள்.... அம்போ


venugopal s
ஜூலை 06, 2025 11:53

உச்ச நீதிமன்றத்திடம் மட்டுமே மத்திய பாஜக அரசின் பாச்சா பலிப்பதில்லை. அதனால் தான் தமிழக அரசு எல்லா விஷயங்களிலும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது!


Kjp
ஜூலை 06, 2025 12:32

நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் போகச் சொல்ல வேண்டியது தானே.


V Venkatachalam
ஜூலை 06, 2025 12:55

உச்ச நீதிமன்றம் அபிஷேக் மனு சிங்வி கபில் சிபல் போன்ற அட்டூழிய வக்கீல்களிடம் சிக்கி இருப்பது கண்கூடு. உச்ச நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நடவடிக்கைகள் எல்லாம் இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது மாதிரி இருக்கும் வரை திருட்டு தீயமுக வுக்கும் அதன் அடிப்பொடிகளுக்கும் காட்டில் மழைதான். இவன்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறான்கள். அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 06, 2025 19:18

தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மட்டும் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் பாச்சா பலிப்பதில்லை .... எத்தனை குட்டுகள் வாங்கினாலும் சுரணையே இருப்பதில்லை....!!!


Minimole P C
ஜூலை 06, 2025 11:41

Shameless Govt.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 11:33

கொடுத்தது முழுசா திரும்பக் கிடைக்குமா?. ஒரு நல்ல அணில் வாங்கினத திருப்பிக் கொடுத்ததால் மாட்டிகிட்டு முழிக்குதே.