உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெவ்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு: 4 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு: 4 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புத்தூர்: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டில், நால்வர் உயிரிழந்தனர்.பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், புதுக்கோட்டை என பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=obnvbgma&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள சிராவயல் பகுதியில் பொங்கலை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். இன்று(ஜன.,16) உரிய ஏற்பாடுகளுடன் மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், மாடு முட்டியதில் 177 பேருக்கு காயம் ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.அதில், சுப்பையா என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல், நடுவிக்கோட்டையை சேர்ந்த சைனீஸ் ராஜா என்பவர், கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிக்க முயன்றார். அதில் தாமரைக்கொடியில் சிக்கி அவர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மங்கதேவன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த பெருமாள் என்ற முதியவர் உயிரிழந்தார். அலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்க வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ray
ஜன 17, 2025 02:30

இந்த வீர விளையாட்டில் குறைகளை மட்டுமே எடுத்துரைத்த BETA கட்டுரை நம்ம குறையையும் சொல்லிடுவோம் ஏன் அந்த மேடையில் அவ்வளவு கூட்டம்? வெற்றி பெற்றவர்களுக்கான மரியாதை ஏனிப்படி? மேடை மீது அழைத்து நின்று இதானமாக அந்தப் பரிசுகளை கவ்ரவமாக தந்தால் என்ன? அந்த மரியாதைக்கு கூட அவர்கள் அறுகதையற்றவர்களா? சிறு குழந்தைகள் பாட்டு பாடினால் பூமழை சால்வை அது இதுன்னு அதகளம் பண்ணுவதைக் காண்கிறோம் ஆனால் உயிரை பணயம் வைத்து விளையாடும் ஜல்லிக் கட்டு வீரர்களோ அந்த தடுப்புக்கு கட்டைகள் மீது ஏறிவந்து நிற்க முடியாமல் தடுமாறி நின்று இரண்டொரு வினாடிகளில் பெற்றுக் கொண்டு முகத்தைக் காட்டாமலே வெளியேறுகிறார்கள். இதற்கு பதிலாக வீரர்கள் களத்திலேயே நிற்க சொல்லி பரிசை மேடையிலிருந்து தூக்கியெறிந்தால் அவர்கள் பிடித்துக் கொண்டு போகட்டும்.


Ray
ஜன 17, 2025 02:13

பிஜேபிகாரனுங்க விளையாட்டு என்னனு சொல்லுங்க தெரு வாசகன்


அப்பாவி
ஜன 16, 2025 20:00

வீரமரணம்னு சொல்லி , ஜாதி பாத்து நாலு லட்சம் சன்மானம்.குடுப்பாய்ங்க.


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 19:57

சாதி அடையாளத்தை காட்டுவதற்காக மாட்டை துன்புறுத்தும் விழாவாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட் தடைபோட வேண்டும். திராவிட நரிகள் ஊளையிட்டால், கண்டுகொள்ள தேவை இல்லை.


Ram pollachi
ஜன 16, 2025 19:49

விளையாட டோக்கன் கேட்டால், பரலோக போக டோக்கன் கொடுத்து விட்டார்கள்.... என்னங்க பொல்லாத வாழ்க்கை இதுக்கு போயி அலட்டிக்கலாமா?


அன்பே சிவம்
ஜன 16, 2025 19:38

1). ஜல்லிக்கட்டு விளையாடி நமது தமிழக மக்கள் மகிழ்ந்தனர் என்பதில் மகிழ்ச்சி. 2).ஜல்லிகட்டு என்பது கோவில் விழா, கோவில் வளாகத்தில் கோவில் காளையினை வணங்கி தொடங்கும் விழா. 3)ஜல்லிகட்டு வீரர்கள் என்பவர்கள் விரதம் இருப்பார்கள், கோவிலில் நேர்ச்சை கடன் செய்வார்கள், காப்பு கட்டிகொள்வார்கள். 4).அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து காளை வளர்ப்போர் அழைப்பார்கள், அதுவும் கோவில் வளாகத்துக்கு அழைப்பார்கள் 5).கோவில் முன்னால் முகூர்ந்தகால் நட்டு உரிய பூஜைகள் வழிபாடுகள் நடந்தபின்புதான் ஜல்லிகட்டு தொடங்கும், 6).கோவிலுக்கான காளை முதலில் வரும் அதை யாரும் தொடமாட்டார்கள் 7)ஆக கோவில் முன்னால் நடக்கும் விழா அது, அதை விழா என்றோ போட்டி என்றோ கூட சொல்லமுடியாது. 8).அது கோவில் கொண்டாட்டத்தில் ஒன்று. 9).மோடி ஜல்லிகட்டுக்கான சட்டத்தை திருத்தும்போது அதாவது பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது பீட்டா அமைப்பு குழப்பியபோது சில திருத்தங்களை மோடி அரசு செய்தது 10)அப்படி செய்யும்போது ஜல்லிகட்டு தமிழகற்களின் சமய விழா, சமய சம்பிரதாய கொண்டாட்டம் என மாற்ற சொல்லி எவ்வளவோ சொன்னார்கள் 11).பன்னீரும் கேட்கவில்லை, மோடிக்கு சொல்லவும் யாருமில்லை கோவில் கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஜல்லிகட்டை அரங்கம் கட்டி திசைமாற்றுகின்றார்கள், 12).இனியாவது அச்சட்டம் தமிழக கோவில் பாரம்பரிய விழா என மாற்றபட் வேண்டும்.


Bye Pass
ஜன 16, 2025 19:36

ஆளும்கட்சி பெருசுங்க,அவங்க குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்


theruvasagan
ஜன 16, 2025 21:25

ஜல்லிக்கட்டு தமிழர்கள் விளையாட்டுதானே. திராவிடர்களது விளையாட்டு இல்லையே. அவங்க விளையாட்டே வேற.


புதிய வீடியோ