உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி

பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி

பரமக்குடி:பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி வாழவந்தாள் கிராமத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரது மகள்கள் செய்யது அஸ்பியா பானு 13, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். மற்றொரு மகள் சபிக்கா பானு 9. அரியக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் மதியம் தனது தாயாருடன் வேப்ப மரத்தடியில் வேப்பமுத்து எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சாரல் மழை பெய்த நிலையில் இடி இடித்தது. இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாக்கின


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 23, 2025 20:56

மிகவும் சோகமான நிகழ்வு. மிகவும் வருந்துகிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.


Natchimuthu Chithiraisamy
ஆக 23, 2025 20:05

பாவம்.


Premanathan S
ஆக 23, 2025 17:26

மிகவும் வருந்துகிறோம். இளங்குருத்துக்கள் . பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல?


சமீபத்திய செய்தி