உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட அனுமதியில் விலக்கு கேட்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்

கட்டட அனுமதியில் விலக்கு கேட்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்

சென்னை: 'ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதில், குறுந்தொழில்களுக்கு 5,000 சதுர அடி வரை விலக்கு அளிக்க வேண்டும்' என, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தலைவர் மோகன், செயலர் வாசுதேவன் ஆகியோர், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடிக்கு அனுப்பியுள்ள கடிதம்: உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. எனவே, குறுந்தொழில்களுக்கு, 5,000 சதுர அடிக்கு கீழ் கட்டட அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சிறு தொழில்களுக்கு, 10,000 சதுர அடி வரை, சுயசான்று பிரிவில் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை