உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tbvnve2i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது. இந்நிலையில், இன்று (டிச.,31) சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.ஓய்வு பெற்ற காவலரான அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காமராஜ் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Iniyan
டிச 31, 2024 21:58

உளுத்து போன நீதி மன்றங்கள்


sankar iyer
டிச 31, 2024 20:28

பெண்களுக்கு பாடம். இதுவரை எல்லை என்று தெரிய வேண்டும். இது தான் முன் பெண்களை படி தாண்டாமல் வைத்து பாத்து காத்தார்கள்


sankaranarayanan
டிச 31, 2024 17:07

சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதி ஹேம்நாத்தை முழுமையாக விசாரிக்காமல் கணவரை விடுதலை செய்தது. அதிலும் மர்ம உள்ளது அப்போதும் மகளிர் ஆணையம் இதை முழுவதையும் விசாரிக்காமல் வழக்கை முடித்துவிட்டனர் இதுபோன்று மகளிருக்கு இழைக்கப்பட்டுவரும் இன்னல்கள் திராவிட நாட்டில் அளவிளமுடியாது இனியாவது விழித்துக்கொண்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்


Subramanian
டிச 31, 2024 16:28

ஆழந்த இரங்கல்கள்.


TCT
டிச 31, 2024 14:40

Not big surprise. We are in Tamilnadu. Any Problem to our girl child the culprit will escape with the help of Dravida Muradar Kazhagam. No worry. Next election also we will vote for Dravida Muradar Kazhagam and bring to power. Nothing will change in Tamilnadu until the rulers change and their thinking


ganesh
டிச 31, 2024 12:40

காவலராக இருந்தவர் தைரியமாக எதிர்கொள்ளவேண்டாமா


Ganesun Iyer
டிச 31, 2024 12:31

மகளிர் கோர்ட்டில் இப்படி தீர்ப்பு.. கடைசில். ஒரு சீரியலுக்கு ரிகர்சல் செய்யும்போதுன்னு.. முடிக்கப்படும்.


rasaa
டிச 31, 2024 12:03

தமிழ்நாட்டில் இனிமேல் எல்லாம் இப்படித்தான். காசு வாங்கி குத்தினாய் அல்லவா? அனுபவி.


Svs Yaadum oore
டிச 31, 2024 11:45

ஓய்வு பெற்ற காவலராம். அவருக்கே இந்த நிலைமை ....இந்த திராவிடனுங்க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நேர்மை என்று எதுவும் கிடையாது....அப்படி பட்டவர்களுக்குத்தான் இங்குள்ள மக்கள் வோட்டு போடுவார்கள் ....அவனவன் பெண்ணை அவனவன்தான் கவனிக்கனும் ...


Duruvesan
டிச 31, 2024 10:44

கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க, இறந்த தந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்


சமீபத்திய செய்தி