உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது குருவியா என விசாரணை

திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது குருவியா என விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடத்தல் குருவியா என விசாரிக்கின்றனர்.சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் ஒருவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சார்ஜாவில் இருந்து ஐஸ் கிரசர் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. கடத்தலுக்கு முக்கிய தலைவனாக உள்ளவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

c.mohanraj raj
மார் 01, 2025 06:32

மர்ம நபர்களால் மட்டுமே இவ்வளவு தங்கத்தை கடத்த முடியும்


rama adhavan
பிப் 28, 2025 14:57

துபாயில் மற்றும் அரபு நாடுகளில் இருந்து இருந்து தங்க கடத்துலுக்கு தானோ இந்த விமான நிலையம் செயல் படுகிறது என்ற ஐயம் நிறைய பேருக்கு உள்ளது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:16

ஒரிஜினல் குருவியினமே அழிஞ்சாலும் ....