உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையங்களில் சோலார் பேனல்

ரயில் நிலையங்களில் சோலார் பேனல்

சென்னை: கரியமில வாயுவை குறைக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சோலார், காற்றாலைகளை நிறுவி, மின்உற்பத்தி செய்து, அதை பயன்படுத்தி வருகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம், காட்பாடி உட்பட, பல்வேறு ரயில் நிலையங்களின் மேற்கூரைகள், அலுவலகங்களில் சோலார் பேனல் அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இந்நிலையில், தாம்பரம், செங்கல்பட்டு, மாம்பலம், ராமேஸ்வரம், புதுச்சேரி, விழுப்புரம் உட்பட 20 ரயில் நிலையங்களில், சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் அமைக்க ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை