உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., தினகரன் தலைமையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அதற்காக, தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கண்டறிந்தார். இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்த போது, ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு இச்சிலையை, தொண்டை மண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர்.தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்.இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலை விரைந்து மீட்கப்படும். மற்ற சிலைகள் குறித்தும் விசாரணை நடப்பதாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
அக் 02, 2024 10:02

இது உற்சவர் சிலை போல உள்ளது. பெரும்பாலான சிலைகள் அறநிலையத்துறையால் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. திருடு போனாலும் புகாரளிக்க வாய்ப்பில்லை. அறநிலையத்துறை சிலைப் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்களுக்குக் கூட சரியான கணக்கு பராமரிக்கப்படுவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தட்சிணையை நம்பி வாழும் பூசாரியின் மீது பழிசுமத்தப்பட்டு விடும். நாத்திக அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை?


ramesh
அக் 02, 2024 12:24

திருநெல்வேலி நெல்லை அப்பர் கோவிலில் உற்சவர் வலம் வரும் வாகனத்தில் வேய பட்டிருந்த வெள்ளி தகடுகளை அங்கிருந்த பட்டர்கள் உரித்து விற்று விட்டார்கள் .இதில் 20 க்கும் மேற்பட்ட பட்டர்கள் மாட்டி கொண்டார்கள். இந்த செய்தி இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் உள்பட அனைத்து பத்திரிகைகளிலும் மிக பெரிய செய்தியாக வந்து இருந்தது ஆரூர்ரங் அவர்களே


பாமரன்
அக் 02, 2024 08:31

ஏம்பா ஆபீஸர்ஸ்... ஃபாரின் டூர் போகனும் அதானே...?? இங்கே இருந்த போது தினந்தோறும் அல்லது திருவிழாக்களில் பூஜை புனஸ்காரம் செய்பவர்கள்... பீரியாடிக்கலா எல்லா சொத்துகளையும் ஆடிட் செய்பவர்கள் கண்ணில் படாமல் மாயமானது எப்படி...?? இந்த விஷயத்தில் எந்த கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் கூட்டுக்களவானிகளாக அல்லது எதாவது பண்ணுங்க அப்பிடின்னு இருந்திருக்காங்க போல... இங்கே முக்கி முக்கி மாநில அரசு... அதாவது டீம்காவ மட்டுமே திட்ட காத்திருக்கும் பகோடாஸ் கிட்ட இந்த சிலைகள் எல்லை தாண்டி எப்படி போக முடியும் மத்திய ஏஜென்சிகள் கட்டிங் வாங்கிட்டு விட்டுட்டாங்களான்னு கேட்டா ....பெப்பெபேப்பே பேபே பேபேன்னு சொல்லும்... கடவுள் அந்த சிலைகளில இல்லை... ஆனால் அவருக்கு காணிக்கை அவை... சரியான தருணத்தில் தண்டிப்பார்...


Sivasankaran Kannan
அக் 02, 2024 06:15

பல ஆண்டு கால திராவிட திருட்டு மாடல்களின் சாதனைகளில் இதும் ஒன்று. இன்னும் எத்தனை செல்வங்களை நாம் இழந்து நிற்கிடறோமோ.. நம்மைக்கே தெரியாது.. கண்ணுக்கு தெரிந்து கொள்ளை போகும் மணல், கனிமங்களை காப்பாற்ற துப்பில்லாத மண், கண்ணுக்கு தெரியாத கொள்ளைகளை பற்றி யோசிக்குமோ?


Kasimani Baskaran
அக் 02, 2024 05:14

சிலை திருட்டு கோஷ்டி யார் என்று கண்டுபிடித்து அவர்களின் குதில்கால் நரம்பை வெட்டி விட வேண்டும்.


J.V. Iyer
அக் 02, 2024 05:12

அவர்களைச்சொல்லி குற்றமில்லை. நம்ம ஊர் ஆட்களெல்லாம் திருடி அனுப்புவதால்தான் இப்படி. இவற்றை தடுப்பதை விட்டுவிட்டு, காவல் துறையினர் ஏவல் செய்வதால் இப்படி. இந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு அளித்தால் நன்றாக பராமரிப்பார்கள். இங்கு அறநிலையத்துறை முற்றுமாக ஒழிக்கப்பட்டபிறகு சிலைகளை இங்கு மீண்டும் கொண்டுவரலாம்.