சில வரி செய்திகள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், லாபகரமான ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்புக்கான நவீன அணுகுமுறைகள் குறித்த, 21 நாள் நேரடி சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4378 என்ற இணைய தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஜி.எஸ்.டி., குறைப்பால், பல்வேறு பொருட் களின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், ரயில்வே சார்பில் இதுவரை, 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், நாளை முதல் 14 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் குடிநீர் பாட்டில், 9 ரூபாய்க்கும் விற்கப்படும். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, நேர்முகத் தேர்வு அல்லாத உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான தேர்வு எழுதியோரின் தரவரிசை பட்டியல், 'https://www.tnpsc.gov.in/' என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.