உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்

தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருத்தாசலம்: உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழந்த சடலம் முன்பு மகன் கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்ட நிகழ்வு விருத்தாசலம் பகுதியில் நடந்துள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கவணை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு அப்பு என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக, செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அவர் உடல்நல குறைவால் காலமானார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dz396c4w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தந்தை மறைவையடுத்து கதறி அழுத அப்பு, அவரது சடலத்தின் முன்பு நின்று கண்ணீர் மல்க விஜயசாந்தி என்பரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தந்தையின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.இதன் பிறகு, செல்வராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Haja Kuthubdeen
ஏப் 18, 2025 09:07

ஏம்ப்பா பாசமான தந்தை உடல் அடக்கம் செய்துவிட்டு சம்பிராதயம் முடிந்து ஒரு வாரம் கழித்து திருமணம் செய்து கொள்ள கூடாதா....


Kanns
ஏப் 18, 2025 06:56

Could have Married Just After Kaaryam by BothWhats Was Urgency Instead of Paying Respects by Both


Matt P
ஏப் 17, 2025 23:29

அப்பா என்றால் இப்படி தான் இருக்கணும் என்று வாழ்ந்திருக்கிறார். அதுக்காக சடலத்தின் முன் தான் திருமணம் நடத்த வேண்டுமா? திருமணத்துக்கு நாள் பார்த்து அவர் படத்துக்கு மரியாதை கொடுத்து மங்களகரமாக நடத்தலாமே. உயிரற்று போன பின் எல்லா உடம்பும் ஓன்று தான்.


Kumar Kumzi
ஏப் 17, 2025 22:12

இதான்டா திராவிஷ மாடல் கலியாணம்


sivan
ஏப் 17, 2025 21:36

இது அவரவர் விருப்பம் சம்பந்தப்பட்டது/... அவர் அப்பாவின் சடலத்தை அவர் சடலமாக பார்க்கவில்லை.. உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் வீட்டில் இறந்து விட்டால். அவர் அடுத்த நிமிடம் சடலம் என்று கருதுவீர்கள் .. எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என கருதாதீர்கள்.


எஸ் எஸ்
ஏப் 17, 2025 21:03

இது மிகவும் தவறு. திருமணம் நடக்கும் போது அந்த இடத்தில் பாசிட்டிவ் வைபரேஷன் இருக்க வேண்டும். சடலம் இருக்கும் இடத்தில் அது எப்படி இருக்கும்? காரியங்கள் முடிந்த பின் குறைந்தது ஆறு மாதங்களாவது பொறுத்து இருக்க வேண்டும்.


வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2025 20:15

எதுக்கும் ஒரு எல்லை உண்டு ...


Mohan
ஏப் 17, 2025 19:27

என்ன கருமம் டா பண்ணிட்டு இருக்கீங்க எழவும் கல்யாணமும் ஒரே நேரத்துலயா ..ஓவரதாண்ட போறீங்க கல்யாணத்த தள்ளிவிக்கலாம் அதுக்குள்ள என்ன அவசரம் மாப்பிளைக்கு இல்ல அந்த பொண்ணுக்கா ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை