உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்

காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள், நேரடியாக காஷ்மீர் செல்லும் வகையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே மெகா திட்டம் தீட்டி வருகிறது.காஷ்மீர் சுற்றுலா செல்வதற்கும், ஆன்மிக யாத்திரை செல்வதற்கும் தமிழகத்தை சேர்ந்த பலரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு நேரடியான ரயில் சேவை இல்லை. காஷ்மீர் செல்வோர், சாலை அல்லது விமானம் மூலமாக மட்டுமே செல்ல வேண்டியுள்ளது.எனவே பயணிகள் நலன் கருதி, தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடியாக செல்லும் வகையில் அம்ரித் பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சிறப்புகள் என்ன?

* இந்த புதிய ரயில் கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை இணைக்க உள்ளது. * இந்த புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் இரண்டு முனைகளிலும் தொழில்நுட்ப வசதியுடன் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.* ரயிலை மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.* உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தின் கடைசி கட்டமான 111 கிலோமீட்டர் நீள பாதை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் புதிய போக்குவரத்து வசதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தான் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.இந்தத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீநகர் பாரமுல்லாவிற்கு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது, மேலும் இந்த பாதை விரைவில் இயக்கத்திற்கு திறக்கப்படும். இந்த சூழலில், தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.தற்போது, ​​கன்னியாகுமரியிலிருந்து- ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 3,785 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயணம் செய்ய முடிகிறது. அம்ரித் பாரத் ரயிலும் இயக்கப்பட்டால் நேரடியாக ஸ்ரீநகர் சென்று சேர பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

22 பெட்டிகள்

2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், 12 ஸ்லீப்பர் பெட்டிகள், எட்டு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் பெட்டிகள் உட்பட 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, விபத்துகள் போன்ற அவசர நிலைகளின் போது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பல்லவி
மார் 10, 2025 18:28

அர்த்தம் புரியாத அம்ரித் அல்லது என்னவோ தெரியவில்லை


பல்லவி
மார் 10, 2025 18:21

தமிழக திட்டங்கள் ஆய்வில் உள்ளதா இல்ல ஓய்வில் உள்ளதா தெரியவில்லை


vivek
மார் 10, 2025 23:16

போலி பல்லவிகு பல் வலியா ?


suren
மார் 10, 2025 15:43

மதுரை முதல் சண்டிகர் 20493/20494 இந்த ரயில் பரமுல்லாஹ் முதல் ராமேஸ்வரம் வரை நீடித்தால் தென் மாநில மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும். ரயில்வே கவனிக்குமா


சண்முகம்
மார் 10, 2025 15:18

பிரதம ஸ்டேஷன் மாஸ்டர் பச்சை கொடி காண்பித்து துவக்கி வைப்பாரா?


nataraj
மார் 10, 2025 19:25

பிரதமரை நக்கல் செய்து கொண்டே உபி யாக இருங்கள். அது தான் நீங்கள் சொல்லும் வடக்கன்களுக்கு நல்லது. அவன் தான் தமிழ் நாட்டில் ஹோட்டல்கள், கட்டுமான இடங்கள், ஹாஸ்பிடல்கள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்கிறான். இங்கு தமிழர்கள் வேலை கிடைக்காமல், வெட்டியாக மோடிஜியை, பிஜேபியை கிண்டல் செய்து கொண்டு காலம் தள்ளுகிறார்கள். சமீபத்திய செய்தியில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் வட நாட்டினர் அதிகம் வேலை செய்வதாக தகவல். நாம் இப்படியே இருப்போம்.


Ramesh Sargam
மார் 10, 2025 12:43

நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். நன்றி இந்திய ரயில்வே அமைச்சகத்துக்கு. நன்றி பிரதமர் மோடி அவர்களுக்கு.


अप्पावी
மார் 10, 2025 12:29

காஷ்மீரி ஆளுங்க மூணாவது மொழியா தமிழ் படிச்சுட்டு உங்களுக்கு சேவை செய்ய காத்துக்கிட்டிருக்காங்க. போங்க.


Keshavan.J
மார் 10, 2025 12:54

யோவ் அப்பாவி நக்கல்யா உனக்கு. ஹிந்திலே பெயரே வெச்சு இருக்கே. ஹிந்தி எதிர்ப்பு இப்படி தான காட்டுவே யா நீ.


ray
மார் 10, 2025 13:11

அப்பாவி ...கேடுகெட்ட புத்தி...


Oru Indiyan
மார் 10, 2025 12:23

மிக சிறந்த திட்டம் வாழ்த்துக்கள்


Ganapathy
மார் 10, 2025 12:23

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது....நாங்க கல்ல எறியத்தான் செய்வோம்...


Barakat Ali
மார் 10, 2025 12:09

சாரி பாகிஸ்தான் சொன்ன பாகிஸ்தானிய விசுவாசிகளுக்கு எரிச்சலூட்டும் செய்தி .....


sethu
மார் 10, 2025 11:56

ஒழுக்கம் இல்லாத தலைவர்கள் இருக்கும் இந்நாட்டில் மக்களின் சுற்றுலா கனவை பாதுகாப்பாக நடத்துவது கடினமாக நினைக்க வைக்கிறது ,இந்திய நாட்டில் இல்லாத இயற்க்கை வளமா வேறு நாட்டில் இருக்கிறது ஆனால் ஷரியா சட்டம் அவசியம் வேண்டும் நாட்டின் நலன் கருதி ஷரியா சட்டம் கொண்டுவந்தால் அணைத்து கட்சி களும் இப்போது முஸ்லீம்களை ஆதரிப்பது போல ஆதரிப்பார்கள் இதுதான் சரியான நேரம் .


Pandi Muni
மார் 10, 2025 15:38

முஸ்லிமுக்கு ஷரியா தண்டனை சட்டம் கொண்டு வரலாம்