உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 70 இடங்களில்சுரங்கப்பாதை தெற்கு ரயில்வே திட்டம்

70 இடங்களில்சுரங்கப்பாதை தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை:சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில், 70 இடங்களில் உள்ள, 'ரயில்வே கேட்'கள் நீக்கப்பட்டு, சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பாதைகளை பயணியர் கடந்து செல்வதை தடுக்க, ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ரயில்வே கேட் எனப்படும் கடவுகளை நீக்கி விட்டு, அங்கு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 70 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க உள்ளோம். இதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை துவங்கி உள்ளோம். இடத்துக்கு ஏற்ப, ஒரு சுரங்கப்பாதை அமைக்க, 10 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த நிதியாண்டில், இப்பணிகளை முடித்து, விரைவில் சுரங்கப்பாதைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை