உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு ஏதிராக அப்பாவு அதிரடி பேச்சு..

மத்திய அரசுக்கு ஏதிராக அப்பாவு அதிரடி பேச்சு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்தில் தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம், நேற்று சென்னை, மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:தமிழகம் கல்வியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு, 8ம் வகுப்பு வரை, கட்டாயக் கல்வி என்கிறது. பள்ளி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக அரசு கல்விக்கு, அதிக நிதியை ஒதுக்குகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில், 44,000 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில், 8 சதவீதம். இது போக உயர் கல்வி உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான், 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தில் நிதி ஒதுக்குவேன் எனக் கூறுகிறது. இது நியாயமா. எந்த அரசு எந்த கல்விக் கொள்கையை கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது நோக்கமல்ல. மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உன் தந்தையார் தொழிலுக்கே செல்ல வேண்டும் என, மறைந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.நாட்டில், 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சமஸ்கிருதம் பேசுவோர், 25,000 பேர் இருப்பர். அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டுமென்பது நியாயமா. எனவே, முதல்வர் சமஸ்கிருதம் தேவை இல்லை என்கிறார். தமிழகத்தில் தற்போது இருக்கின்ற முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

Ramesh Sargam
செப் 25, 2024 20:28

இந்த அப்பாவு வீட்டில் என்றைக்கு ED, IT, CBI ரெய்டு?


K Veerappan
செப் 24, 2024 19:52

இவர் வகிக்கும் பதவிக்கு கொஞ்சம் கூட லாயக்கில்லாத மனிதர். இது வரை இருந்த சபாநாயகர்களிலே இவர் மாதிரி கட்சி சார்பில் பேசியதாக சரித்திரமே இல்லை.


sankaran
செப் 19, 2024 08:54

அப்போ திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் வெறும் மாநில கல்வி , சமசீர் கல்வி மட்டும் போதுமே... எதுக்கு CBSE ஐ பின்பற்ற வேண்டும்?. மற்ற மாநிலங்களில் இந்த பிரச்னை இல்லை...


M Ramachandran
செப் 18, 2024 19:37

சில அப்பாவுவை அடப்பாவி என்று கூறுவார். கூட்டணியின் தலைவருக்கு இதமாக மனம் குளிரும் படி நடப்பவர்.அவரிடம் ஷொட்டு வாங்கி ஆனந்திப்பவர் .


krishnamurthy
செப் 18, 2024 08:21

சமிச்கர்த்தம்தான் படிக்கவேண்டும் என்று எங்குள்ளது


S.V.Srinivasan
செப் 17, 2024 11:57

இவனை எங்காவது நாடு கடத்துங்கப்பா சபாநாயகனா லட்சணமா இல்லாம சும்மா அரசியல் பண்ணிக்கிட்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வேறு வாங்கறான். மதம் மாறி..


Ramalingam Shanmugam
செப் 17, 2024 10:01

இன்னொரு


என்றும் இந்தியன்
செப் 15, 2024 18:33

அப்பாவு சொல்வதில் என்ன தவறு???கிறித்துவர்களுக்கு தெரிந்த ஒன்று கிருத்துவர்கள் அல்லாதவர்கள் sinners என்று அவர்கள் பைபிளில் முஸ்லீம் குரானில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் காபிர் அவர்கள் கையை வெட்டு கழுத்தை வெட்டு என்று எழுதியிருக்கும் போது அவர்கள் அப்படித்தான் இந்தியாவிற்கு எதிராகவே இருப்பார்கள்


Natarajan Ramanathan
செப் 12, 2024 01:31

இது அப்பாவு பேச்சு அல்ல. அவன் உள்ளே இருக்கும் பாவாடையின் பேச்சு.


C.SRIRAM
செப் 07, 2024 15:44

தமிழ் நாட்டின் மக்கள் தொகை எப்போது பத்து கோடி ?. இவர் பொய் கணக்கையும் சேர்த்துச்சொல்கிறாரோ ?.மீண்டும் தெருக்கோடி அரசியல் வியாதி என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் சட்ட சபையை நடத்தும் விதமே தகுதியை பறை சாற்றும் . இந்த கூமுட்டை கும்பலுக்காகவே பதிலடி கொடுப்பது போல மிக அதிக தமிழ் மக்கள் தான் ஹிந்தியை பிரச்சார சபா மூலம் கற்றுக்கொள்கிறார்கள் . நீட் தேர்ச்சி பெரும் மாணவர்களில் தமிழக மாணவர்கள் தொகை அதிகரித்து வருகிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை