உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சபாநாயகர் அப்பாவு ஆசை நிறைவேறும்

 சபாநாயகர் அப்பாவு ஆசை நிறைவேறும்

“அறிவு திருவிழா” என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதற்கு எதிராக தி.மு.க.,வினர் பேசுகின்றனர். தி.மு.க. அரசு, பொதுநலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் சென்றது கிடையாது. மத்திய அரசுக்கு எதிராகவே, ஐந்து ஆண்டுகளாக போராடுகிறது. தற்போது, எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கும்போது, வருவாய்த்துறை ஊழியர்களை போராடுமாறு, தி.மு.க., அரசு தான் துாண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராடிய பிறகு, மூன்று வேளை உணவு வழங்குவதாக, தி.மு.க., அரசு அறிவிக்கிறது. அவர்களுக்கு தேவை, பணி நிரந்தரம் தான். தி.மு.க.,வுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோருக்கு, பீஹார் தேர்தலில், 2 சதவீத ஒட்டுகளே கிடைத்துள்ளது. அதே நிலைதான், தி.மு.க.,வுக்கு ஏற்படும். 'பா.ஜ.,வுடன் விஜய் கூட்டணி சேருவார்,' என சபாநாயகர் அப்பாவு கூறுகிறார். அவர் ஆசை நிறைவேறும். - நயினார்- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை