உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்

நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்

சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அறிக்கை:நாகூர் தர்கா பெரிய கந்துாரி விழா, டிசம்பர், 2ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி, 15ம் தேதி நிறைவடைகிறது. எனவே, பயணியர் வசதிக்காக, சென்னை, திருச்சி, வேலுார், மதுரை, பெங்களூரு, சிதம்பரம், கும்பகோணம், ராமநாதபுரம் போன்ற ஊர்களில் இருந்து, டிசம்பர், 1 முதல் நாகூருக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் www.tns tc.inஎன்ற இணையதளம் மற்றும் 'tns tc official app' வாயிலாக, முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி