உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்

விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்

கம்பம் : விவசாயிகளின் அனைத்து விபரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்து ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் எண் போன்று பிரத்யேக எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் விபரங்களை சேகரிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்கள் ஜன. 2 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்ய வேளாண் இயக்குநரகம் ஒருசெயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும், அதில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது ஆனால் அந்த செயலிஇதுவரை வழங்கப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறுகளால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை எனவும் ஜன . 20 க்கு பின் செயலி தயாராகி விடும், அதன் பின் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் வேளாண் துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ